முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்ட திட்டம் - நடிகர் கருணாஸ் கைது

Published By: Digital Desk 4

25 Mar, 2021 | 09:41 PM
image

இந்திய முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரான நடிகர் கருணாஸ் காவல் துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி பிரச்சாரம் செய்யும் போது அவருக்கு கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டிருந்ததாக கூறி தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் கருணாஸை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்கள்.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய நடிகர் கருணாஸ், கடந்த 10 ஆம் திகதியன்று தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கினார். 

ஆனால் கருணாசுடன் தி.மு.க பேச்சுவார்த்தை நடத்துவதற்கோ அல்லது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வகையில் தொகுதியை ஒதுக்குவதற்கோ முன்வரவில்லை. இதனால் ஆதரவு கடிதம் அளித்த சில தினங்களிலேயே திமுகவிற்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை போட்டியிடவில்லை எனவும் அறிவித்தார்.

இருப்பினும் நடிகர் கருணாஸ் அதிமுகவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருந்ததாகவும், முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி பயணத்தின்போது கருப்புக்கொடி காட்ட இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை அடுத்து காவல்துறையினர் நடிகர் கருணாஸை கைது செய்து சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆப்கானிஸ்தானில் இயங்கும் சீன உணவகத்தில் குண்டுவெடிப்பு...

2026-01-20 13:09:31
news-image

ஈராக்கை விட்டு முழுமையாக வெளியேறியது அமெரிக்க...

2026-01-20 12:31:13
news-image

அமெரிக்கா கிரீன்லாந்தைக் கட்டுப்படுத்தும் வரை உலகம்...

2026-01-20 11:49:20
news-image

“சீனா அச்சுறுத்தல்” என்ற பெயரில் அரசியல்...

2026-01-20 11:41:48
news-image

ரஷ்யாவின் கம்சட்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத...

2026-01-20 11:44:25
news-image

படிக்கச் சென்றபோது பரிதாபம்: 13 மாணவர்கள்...

2026-01-20 10:01:53
news-image

கிரீன்லாந்து விவகாரம் ; வரி அச்சுறுத்தலை100...

2026-01-20 09:37:38
news-image

பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்த ஜப்பான்...

2026-01-19 16:14:47
news-image

சீனாவில் 4 ஆவது ஆண்டாக குழந்தைகள்...

2026-01-19 15:48:32
news-image

இந்தியாவின் வடமேற்கு காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

2026-01-19 14:31:34
news-image

பாகிஸ்தானில் வணிக வளாகத்தில் தீ விபத்து...

2026-01-19 13:24:01
news-image

சீனாவில் தொழிற்சாலையில் வெடிப்பு சம்பவம் ;...

2026-01-19 12:44:09