“மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு பீஜிங் ஆதரவளிப்பதாக கருதப்பட்டு சீனாவிற்கு சொந்தமான பல ஆடைத்தொழிற்சாலைகள் தீக்கிரையாக்கப்பட்டன. அதனையடுத்து மியன்மார் அதிகாரிகள் யங்கோனின் சில பகுதிகளில் இராணுவ சட்டத்தினை  அமுலாக்குவதாக அறிவித்தனர்”

மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பைச் செய்துள்ள இராணுவ ஆட்சிக்குழுவிற்கு பீஜிங் ஆதரவளிப்பதாக கருதப்பட்டு சீனாவுக்குச் சொந்தமான தொழிற்சாலைகள் பல தீக்கிரையாக்கப்பட்டன. இதனையடுத்து யங்கோனின் சில பகுதிகளில் மியனமார் அதிகாரிகள் இராணுச் சட்டத்தினை அமுலாக்கியுள்ளனர். தொழிற்சாலைகளுக்கு தீக்கிரை வைக்கப்பட்டமை, இராணுவச் சட்டம் அமுலாக்கப்பட்டமையால் மியன்மாரின் பொருளாதாரத்திற்கு ‘பலவீன’ அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக அணிதிரண்டுள்ள போராட்டக்காரர்கள் மீண்டும் கவிழ்க்கப்பட்ட ஆட்சியை நிலைநிறுத்துமாறு வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்தப் போராட்டங்களை அடக்கி வரும் மியன்மார் இராணுவம் இதுவரையில் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகங்களில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். 

இவ்வாறிருக்கு, மியன்மாரில் உள்ள சீன தூதரகம், தொழிற்சாலைகள் மீதான தாக்குதல்களை ‘மிகவும் மோசமானவை’ என்று குறிப்பிட்டு கண்டனத்தினை வெளியிட்டது. அத்துடன், வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை தண்டிக்கவும், சீன வணிகங்களையும் நாட்டிலுள்ள சீன பிரஜைகளை பாதுகாக்குமாறு வலியுறுத்தியுள்ளது. 

சீன தூதரகத்தின் கூற்றுப்படி, பல சீன ஆதரவு தொழிற்சாலைகள் அடித்து நொருக்கப்பட்டன, அதேநேரத்தில் பல சீன பிரஜைகள் காயமடைந்தனர். மியான்மர் மக்கள் தங்கள் கோரிக்கைகளை சட்டபூர்வமாக வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம், மேலும் சீனாவிற்கும் மியான்மருக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்களைப் பாதிப்படையச் செய்யும் வகையில் தூண்டப்படுவதையும் சுரண்டப்படுவதையும் தவிர்க்க வேண்டும்" என்று தூதரகம் மியன்மார் அதிகாரிகளிடத்தில்  அழுத்திக் கூறியுள்ளது. மியன்மாரில் ஆடைத் துறையில் முதலீடு செய்துள்ள சீனா, கிட்டத்தட்ட 400,000 வேலை வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளது.

மியான்மரில் ஆட்சிக்கவிழ்ப்பு சதித்திட்டத்தினை எதிர்க்கும் பல எதிர்ப்பாளர்களுக்கு எதிரான வன்முறையை கண்டிக்க மறுத்தமைக்காக சீனா மீது அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பீஜிங் இராணுவத்திற்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர்கள் கருதுகின்றனர் என்று வோல்ட் ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது. 

ஆனாலும் சட்டவிரோதமான போராட்டங்கள் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் மியன்மாரின் ‘உள்ளக விவகாரம்’ என்று சீனா கூறுகின்றது. அதேநேரம் மியன்மாரில் தற்போதைய நிலைமைகளை மேலும் சிக்கலாக்குவதை சர்வதேச சமூகங்கள் தவிர்க்க வேண்டும் என்று சீனவெளியறவு அமைச்சு பகிரங்கமாக தெரிவித்துள்ளது.

அதேநேரம் மியன்மாரில் உள்ள சிலர், மியன்மார் இராணுவ ஆட்சிக்குழுவுடன் சீனாவுக்கு உள்ள உறவுகள் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் போராட்டங்களில் பங்கேற்காது தொழிலாளர்களை புறக்கணிக்கச் செய்தததில் பங்குவகித்த சீன நிறுவனங்களின் பட்டியலையும்  அவர்கள்  சமூக ஊடகங்கள் ஊடாக பகிர்ந்துள்னர். 

இதனைவிடவும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படங்களில் மிக முக்கியமான சீனாவின் தேசியக் கொடியில், ‘சீனா பர்மாவிலிருந்து வெளியேறுகின்றது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இதனைவிடவும் யங்கோனின் உள்ளவர்கள் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்கணால்களில் பீஜிங்கின் மீது விரக்தி அடைந்துள்ளதாக கூறியுள்ளனர். 

இதேவேளை, மியான்மரின் பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவரான மோன் சாந்தர் மைன்ட், “தனது கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆடைத் தொழிலாளர்கள் பலரும் சீன முதலாளிகளால் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பது மற்றும் ஒத்துழையாமையில் ஈடுபட்டிருப்பது தொடர்பில் அச்சுறுத்தப்படுகிறார்கள்” என்று கூறினார்.

அத்துடன், “மியன்மாரில் உள்ள சீன தூதரகத்தின் அறிக்கை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான பீஜிங்கின் நிலைப்பாட்டை பொய்யாக்கியுள்ளது, ஆர்ப்பாட்டங்களின் போது கொல்லப்பட்ட மியான்மர் நாட்டினருக்கு எந்த அனுதாபத்தையும் பீஜிங் காட்டவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார். 

மேலும், “அவர்கள் (பீஜிங்) மியான்மர் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை, அவர்கள் (பீஜிங்)  நாட்டில் தங்கள் சொந்த நலன்களைப் பற்றி மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள்" என்று மோ சாண்டர் மைன்ட் குறிப்பிட்டார். 

மியன்மார் நாட்டின் ஆடைத் தொழிற்சாலைகளில் சுமார் 40 சதவீதமானவை சீன உரிமையாளர்களைக் கொண்டவையாக உள்ளன என்று மியன்மார் தேசிய ஆடை சங்கத்தை மேற்கோள் காட்டி வோர்ல் ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

பெப்ரவரியில் மியன்மாரின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியதிலிருந்து  ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் மியான்மரின் வீதிகளில் இறங்கியுள்ளனர், ஆங் சான் சூகி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வெளியேற்றமைக்கு தமது தொடர்ச்சியான எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த எதிர்ப்புக்களை தவிர்ப்பதற்கு பெருமளவிலான படைகள் குவிக்கப்பட்டபோதும் அவற்றைக் கடந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

சீனாவும் ரஷ்யாவும் மியான்மரின் இராணுவத்தை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றன, மியான்மரின் உள் விவகாரத்தில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடமிருந்து ஆயுதப்படைகள் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று அறிக்கைகள் கூட வெளியிடப்பட்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.