மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைநகர் பகுதியில் கேரள கஞ்சாவுடன் 42 வயதுடைய பெண்ணொருவரை  மூதூர் சிறு குற்றத்தடுப்பு பொலிஸார்  நேற்று (24)மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கைதுசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 2,200 மில்லி கிராம் நிறையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண் வீட்டில் கேரள கஞ்சா வியாபாரம் செய்து வருவதாக மூதூர் சிறு குற்றத்தடுப்புப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின்  அடிப்படையில்  குறித்த வீட்டை சோதனைக்குட்படுத்தியபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டிலிருந்து கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண் மூதூர் பொலிஸில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவரை மூதூர் நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம்(25) ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.