(இராஜதுரை ஹஷான்)
தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் அனைத்து ஊழியர்களின் மாத கொடுப்பனவை 25 சதவீதத்தால் அதிகரிக்குமாறு நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் முகாமைத்துவ பிரிவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதிகார சபையின் பொறியியலாளர்கள்,தொழினுட்ப உதவியாளர்கள் சிற்றூழியர்கள் என அனைத்து தரப்பினரும் இத்தீர்மானத்தில் உள்வாங்கப்படுவார்கள்.
நீர்வழங்கல் அதிகார சபையின் தொழிற்சங்கத்தினருடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை தொடர்ந்து அமைசச்ர் இத்தீர்மானத்தை எடுத்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுசூழலுக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு எதிர் தரப்பினர் பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து முறையான விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சுற்றுசூழல் பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே 2025 ஆம் ஆண்டு அனைவருக்கும் சுத்தமான குடிநீர்வழங்கும் திட்டம் வெற்றிப்பெறும் இதற்கு அனைத்து தரப்பினரது ஒத்துழைப்பும். அவசியம். சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க முடியாது..
நீர்வழங்கள் அதிகார சபையின் ஊழியர்கள் எதிர்க் கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமைச்சரவை பத்திரம் ஊடாக சாதகமான தீர்வு வெகுவிரைவில் கிடைக்கப் பெறும் என அமைச்சர் தொழிற்சங்கத்தினரிடம் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM