(செ.தேன்மொழி)

வெலிக்கடை சிறைச்சாலை கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட அதிகாரி பணி இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்க நாயக்க தெரிவித்தார்.

சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதிகள் இருவரின்  பாதுகாப்பிற்காக வெலிக்கடை சிறைச்சாலையில் பணிபுரிந்து  வரும் அதிகாரியொருவர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.

குறித்த அதிகாரியிடம் கஞ்சா போதைப் பொருள் இருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்கள  குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவரிடமிருந்து 1510 மில்லி கிராம் கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவரை பணியிடை நிறுத்த சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்ததாகவும் சிறைச்சாலை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.