(செ.தேன்மொழி)

இத்தினபுரி - சிரிபாகம பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சிரிபாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுக்வத்த பகுதியில் நேற்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மல்வல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இவரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. சிரிபாகம பொலிஸார் சந்தேக நபர்தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.