(செ.தேன்மொழி)

வாடகைக்கு வாகனங்களைப் பெற்று அவற்றுக்கான போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்த நால்வர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

குருணாகலைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர்கள் நீண்ட நாட்களாக இவ்வாறு மோசடி செய்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

அத்தோடு இவர்கள் கொள்ளையிடும் வாகனங்களின் இலக்க தகடுகளை மாற்றி அவற்றையும் விற்பனை செய்துள்ளனர். சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.