திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை, மூதூர் சிறு குற்றத்தடுப்புப் பொலிஸார், நேற்று (23) இரவு முற்றுகையிட்டபோது, அங்கிருப்பு கசிப்பு, கோடா போன்றவற்றுடன் பெண்ணொருவரை கைது செய்துள்ளனர்.

மேற்படி பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் இயங்குவதாக மூதூர் சிறு குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைவாக, அங்குள்ள வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டது. 

இதன்போது அங்கிருந்து கசிப்பு காய்ச்ச பயன்படுத்தப்படும் கோடா 1 இலட்சத்து 35 ஆயிரம் மில்லி லீற்றர், 1,500 மில்லி லீற்றர் கசிப்பு போன்றன கைப்பற்றப்பட்டன. அத்துடன், 55 வயதுப் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டார் என மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.