(ஆர்.ராம்)

விவசாய உற்பத்திகளுக்கான விலைகளை அரசாங்கத்திற்கும் அப்பாற் சென்று ஓரிருவரே தீர்மானிக்கின்றனர் என்று குற்றம் சாட்டிய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விவசாயிகளையும் நுகர்வோரையும் தவிர மத்திய தரகர்களே பெருவாரியான இலாபமீட்டுவதாகவும் சுட்டிக்காட்டினார். 

மஹிந்தானந்த அளுத்கமகே மீது வழக்குத் தாக்கல் | Virakesari.lk

பிரிகேடியர் பேராசிரியர். ரிரான் த சில்வா தலைமையில் நடைபெற்ற நாடாளவிய விவசாயிகளையும், சந்தைவாய்ப்புக்களையும், நுகர்வோர்களையும் ஒருங்கிணைக்கும் ‘அக்ரோ-பிஷ்’ செயலி அறிமுக நிகழ்வு வோட்டர்ஸ் எஜ் விடுதியில் இன்று புதன்கிழமை நடை பெற்றது. 

இந்நிகழ்வில்  அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண, இராஜாங்க அமைச்சர்களான ரொஷான் ரணசிங்க, சானக்க வகும்பர உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இங்கு அமைச்சர் மஹிந்தானந்த மேலும் உரையாற்றுகையில், 

விவசாய அமைச்சினைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் தற்போது வரையில் அன்றாட உற்பத்திகளைப் பூர்த்தி செய்வது மிகவும் சவால் மிக்கதாக காணப்படுகின்றது. தற்போது வெவ்வேறு நிறுவனங்கள் மற்றும் கட்டமைப்புக்கள் ஊடாகப் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 8 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 

விவசாயிகள் உள்ளிட்ட முக்கிய முறையான தரவுகளை முழுமையாக பெற்றுக்கொள்வதில் குறைப்பாடுகள் காணப்படுகின்றன.

முழுமையான தரவுகள் எங்களிடத்தில் காணப்படவில்லை. ஆகவே தரவுகள் முழுமையாக இல்லாது எவ்விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாதுள்ளது. அந்தவகையில் இந்த செயலி மூலமாக அனைத்துவித தரவுகளையும் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது. 

நாம் தற்போது தங்கியிருக்கும் பொருளாதார நிலைமையில் உள்ளோம். இந்த நிலைமைகள் மாற்றப்பட்டு உற்பத்திப் பொருளாதாரத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

அதற்காக இந்த நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களையும் உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 

தற்போது கிட்டத்தட்ட 250 பில்லியன் டொலர்கள் வரையிலான வெவ்வேறு பட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை நாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கின்றோம். 

இந்த நிலைமைகளை மாற்றியமைப்பதற்காக இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தேசிய உற்பத்தியில் 35சதவீதத்தினை உள்நாட்டில் உற்பத்தி செய்துகொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். 

இவ்வாறான நிலையில் தற்போதுää இந்த நாட்டின் அரசி விலையை இருவருவரே தீர்மானிக்கின்றனர். முட்டையின் விலையை ஒருவரும் கோழி இறைச்சியின் விலையை நால்வரும்ää சோளத்தின் விலையை இருவரும் தீர்மானிக்கின்றனர். 

விவாசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் மத்தியில் உள்ள தரகர்கள் அரசாங்கத்திற்கும் அப்பாற் சென்று தற்போது பொருட்களின் விலையை தீர்மானிக்கும் சக்தியைப் பெற்றுக்கொண்டுள்ளனர். 

அதாவது, விவசாயிகளிடமிருந்து உற்பத்திகளைக் குறைந்த விலையில் பெற்று அதனைக் களஞ்சியப்படுத்தி வைத்து அதிகவிலையில் விற்பனை செய்யும் தரப்பு நாடெங்கும் வியாபித்துள்ளது. 

விவசாய உற்பத்திப்பொருட்களை கொள்வனவு செய்வதற்கான கடன்தொகையை வெறும் நான்கு சதவீதத்திற்கு வங்கிகள் வழங்க வேண்டும் என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் மத்தியில் உள்ள தரகர்களுக்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. 

அரசாங்கம் என்ற வகையில் நாம் குறைந்த வட்டி வீதத்தினை அறிவித்து இழைத்த தவறின் காரணமாகவே மத்தியில் உள்ள தரகர்கள் வங்கிகளில் கடன்களைப் பெற்று குறைந்த விலையில் உற்பத்திகளைப் கொள்வனவு செய்து  களஞ்சிப்படுத்தி மிகப்பெரும் இலாபத்தில் விற்பனை செய்கின்றனர். 

இந்த நிலைமையிலிருந்து உற்பத்தியாளர்களும், நுகர்வோரும் விடுபடுவதற்கு இவ்வாறான செயலி வழிசமைத்துள்ளது. இதன்மூலம் உற்பத்தியாளர்கள் சந்தைவாய்ப்பிப் பெறுவதோடு நுகர்வேருக்கும் நியாயமான விலையில் பொருட்களை கொள்வனவு செய்யும் நிலைமை ஏற்படுகின்றது. 

மேலும், விவசாய அமைச்சானது விவசாயிகள் அனைவரினதும் தகவல்களை திரட்டி வருகின்றது. அத்துடன் தேசிய கொள்கையையும் தயாரித்து வருகின்றது. அடுத்த மூன்று மாதங்களில் நிறைவுக்கு வரவுள்ளது. 

ஆகவே இந்தச் செயலி மூலமான செயற்றிட்டமும் தரவுகளை முறையாக பெறுமிடத்து மேலும் முன்னேற்றகரமாக நிலைக்கு விவசாயத்துறையை இட்டுச் செல்ல முடியும் என்றார்.