(இராஜதுரை ஹஷான்)

கறுவா உற்பத்தியிலான ஆயுர்வேத சிகரெட் தயாரிப்பு ஊக்குவிப்பு, கஞ்சா பயிர்செய்கையை சட்டப்பூர்வமாக்கல் ஆகியவை நாணயத்தின் இரு பக்கங்களாகும். தனியார் நிறுவனங்கள் இலாபம் ஈட்டிக் கொள்வதற்காக இவ்வாறானா உற்பத்திகளை அறிமுகப்படுத்துகிறார்கள். 

கறுவா உற்பத்தியிலான சிகரெட் தயாரிப்புக்கு மருத்துவ நிறுவனம், ஆயுர்வேத திணைக்களம் ஏதும் அனுமதி வழங்கவில்லை. 

ஆயுர்வேத புகைத்தல் பாவனை இறுதியில் பாரதூரமான புகைத்தல் பாவனைக்கு கொண்டு செல்லும். ஆகவே பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் இவ்வாறான உற்பத்திகளுக்கு ஒருபோதும் அனுமதி வழங்க கூடாது என இலங்கை மருத்துவ  சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.