(ஜே.ஜி.ஸ்டீபன் – ப.பன்னீர்செல்வம்)
வடபகுதி தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தமாட்டார்கள். அம்மக்கள் யுத்தத்தையும் ஆதரிக்கமாட்டார்கள். ஏனென்றால் யுத்தத்தால் பாரிய அழிவுகளை தமிழ் மக்கள் எதிர்கொண்டனர் எனத் தெரிவித்த ஜே.வி.பி. எம்.பி. பிமல் ரத்னாயக்க.
காணாமல் போனோரின் குடும்பங்களின் “சோகக் கதையை” கேட்பதாக மட்டுமே விசாரணைக்குழு அமையாது அம்மக்களுக்கு சட்ட உதவி வழங்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் காணி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே பிமல் ரத்னாயக்க.எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் புலிக்கொடி பறக்கின்றது. புலி சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றது. மீண்டும் வடக்கு யுத்தத்திற்கு தயாராகின்றது போன்ற செய்திகள் இணையத்தளங்களின் ஊடாக மஹிந்த இனவாதப் பிரசாரத்தை முன்னெடுக்கின்றார்.
யுத்தத்தில் பெரும் அழிவுகளை சந்தித்தவர்கள் தமிழ் மக்கள்களாவார்கள். எனவே வடக்கு தமிழ் மக்கள் மீண்டும் யுத்தத்தை அதிகரிக்க மாட்டார்கள். அம் மக்கள் யுத்தத்தினை வெறுக்கின்றார்கள் என்றும் பிமல் ரத்னாயக்க எம்.பி. தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM