பேராயர் தலைமையிலான நடவடிக்கைகளை முடக்க முயற்சி - சமிந்த விஜேசிறி

Published By: Digital Desk 3

24 Mar, 2021 | 01:09 PM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் கைது செய்ய வேண்டும் என்பதற்காக , காரணங்கள் எவையுமின்றி பலரும் கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பேராயர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை முடக்குவதற்காகவே இவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதாகக் கூறி வெவ்வேறு நபர்கள் கைது செய்யப்படுகிறார்கள். எவ்வித காரணமும் இன்றி பலரை கைது செய்கின்றனர்.  பேராயரால் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகளை முடக்குவதற்காக இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதே போன்று மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பிலும் முரண்பட்ட கருத்துக்களை அரசாங்கம் முன்வைத்துக் கொண்டிருக்கிறது. மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில் ஜெனிவாவில் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக தற்போது நல்லாட்சி அரசாங்கத்தின் மீது பழிசுமத்துகின்றனர். அரசாங்கத்தின் இவ்வாறான போலி செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி அதன் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கும்.

ஜனாதிபதியின் 'நதிகளைப் பாதுகாப்போம்' வேலைத்திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் எவ்வாறான கேலி நாடகங்கள் அரங்கேற்றப்படவுள்ளது என்பதை அறிய விரும்புகின்றோம். அரசாங்கத்தின் சகாக்களுக்கு இந்த வேலைத்திட்டம் கையளிகப்பட்டுள்ளதாகவே தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வேலைத்திட்டம் உண்மையில் நதிகளைப் பாதுகாப்பதற்காகவா அல்லது அதற்கு அருகிலுள்ள சுற்றுச்சூழலை அழியவடைச் செய்வதற்கா ? இவ்வாறான வேலைத்திட்டங்கள் மூலம் மீண்டும் சுற்றாடல் சீரழிவுகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08