எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் நவீன தொழிநுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய சத்திரசிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப்பிரிவு,  சிகிச்சை விடுதிக் கட்டிடத்தொகுதி என்பனவற்றை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பொதுமக்களிடம் கையளித்தார். 

நீண்டகாலமாக இந்த வைத்தியசாலையில் இருந்துவந்த பல்வேறு குறைபாடுகளை நீக்கி சுமார் 100 கோடி ரூபா செலவில் இந்த அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சகல வசதிகளையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை விடுதிக்  கட்டிடத் தொகுதியைத் திறந்து வைத்த ஜனாதிபதி, அந்த வாட்டுக்களையும் பார்வையிட்டார். ஆண்களுக்கான சிகிச்சை விடுதிக்கு அனுமதிக்கப்பட்ட முதலாவது நோயாளியை பதிவு செய்யும் இடாப்பில் பதிவு செய்யும் நிகழ்வையும் ஜனாதிபதி ஆரம்பித்துவைத்தார். 

வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள புதிய 5 மாடிக் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல்லையும் ஜனாதிபதி நாட்டி வைத்தார்.

எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 5700 மில்லியன் ரூபாக்களைச் செலவிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.