(எம்.மனோசித்ரா)

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை இலங்கையில் அவசர பயன்பாட்டுக்காக உபயோகிப்பதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது. 

அதற்கமைய 7 மில்லியன் தடுப்பூசிகளை முதற்கட்டமாக கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக இலங்கையின் சனத்தொகையில் 14 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அதன் ஆரம்பகட்டமாக 5 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு சுகாதார அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இலங்கையில் அவசர பயன்பாட்டுக்காக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாட்டு குழுவின் பரிந்துரைக்கமைய 7 மில்லியன் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை 69.65 மில்லியன் அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.