மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்குமான கல்வி நடவடிக்கையினை மார்ச் 29 திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்க சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதற்கான அனுமதியினை கல்வியமைச்சுக்கு வழங்கியுள்ளார்.

மார்ச் 15 ஆம் திகதி திங்கட்கிழமை மேல் மாகாணத்தில் தரம் 05, தரம் 11 மற்றும் தரம் 13 ஆகியவற்றுக்கு மாத்திரமே பாடசாலைகள் திறக்கப்பட்டன.

ஏனைய வகுப்புகளுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது ஏப்ரல் விடுமுறையின் பின்னர் 19 ஆம் திகதியாகும் என கல்வி அமைச்சு முன்னர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.