(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
சீனி இறக்குமதியால் அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கும் உண்மையான நஷ்டத்தை கண்டறிய தடயவியல் கணக்காய்வொன்றை மேற்கொள்ளவேண்டும். அத்துடன் மக்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கியதாக அரசாங்கம் பொய் பிரசாரம் செய்கின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் கலாநிதி ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நிதி அமைச்சின் கீழ் இருக்கும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலே சீனிக்கான இறக்குமதி வரியை 50 ரூபாவில் இருந்து 49.75 ரூபாவரை குறைக்க நடவடிக்கை எடுத்தது. ஆனால் 25 சதம் வரிக்கு சீனி இறக்குமதி செய்ததன் நன்மை மக்களுக்கு கிடைக்கவில்லை என்பது யாரும் அறிந்த விடயம்.
ஒரு கிலாே சீனி 85 ரூபாவுக்கு விற்கப்படவேண்டும் என ஜனாதிபதி வர்த்தமானி அறிவிப்பின் மூலம் தெரிவித்திருந்தார். அந்த வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் மக்களுக்கு சீனி பெற்றுக்காெள்ள முடிந்ததா என கேட்கின்றேன்.
பொருட்களின் இறக்குமதி வரி அதிகரிப்பதும் குறைப்பதும் அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் மேற்கொள்ளப்படுகின்றது. எமது அரசாங்க காலத்திலும் அவ்வாறு இடம்பெற்றிருக்கின்றது. அது தவறு என தெரிவிக்கவில்லை. ஆனால் இங்கு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு என தெரிவித்து, அரசாங்கத்துக்கு கிடைக்கவேண்டிய வருமானத்தை இல்லாமலாக்கி இருக்கின்றது.
மேலும் கடந்த ஒக்டோபர் மாதம் சீனி இறக்குமதிக்கான செலவு ஒரு கிலோவுக்கு 80.75 ரூபாவாகும். ஆனால் சீனி இறக்குமதி 25 சதம் வரை வரி குறைப்பின் மூலம் கடந்த நவம்பர் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை இறக்குமதி செலவு கிலாவொன்றுக்கு 77.27 ரூபாவாகும். ஆனால் இந்த காலப்பகுதியில் சதொச நிறுவனம் ஒரு கிலாே சீனி நூறு ரூபாவுக்கும் அதிகவிலைக்கு பெற்றுக்கொண்டுள்ளதாகவே அதிகமானவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் உண்மையில் எத்தனை ரூபாவுக்கு பெற்றுக்கொண்டது என்பது யாருக்கும் தெரியாது.
அதனால்தான் சீனி இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளது தெளிவாகின்றது. அதனால் ஏற்பட்டிருக்கும் உண்மையான நட்டத்தை தெரிந்து கொள்வதற்கு இதுதொடர்பாக தடயவியல் கணக்காய்வு மேற்கொள்ளப்படவேண்டும். அதன் மூலமே உண்மையை கண்டறியலாம்.
அதேபோன்று எரிபொருள் விலை கடந்த ஏப்ரல் மாதம் உலக சந்தையில் பாரியளவில் குறைவடைந்தது. ஆனால் மக்களுக்கு அதன் நன்மையை அரசாங்கம் வழங்கவில்லை. எரிபொருள் மானியம் வழங்கியதாக அரசாங்கம் பொய் கூறிவருகின்றது. எமது காலத்தில் இருந்த விலையே இன்றும் எரிபொருள் விற்பனையாகின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM