தீக்கிரையாக்கப்பட்ட கஜிமாவத்தை தொடர் குடியிருப்பு மக்களுக்கு வீடுகள் இல்லையா? - சஜித் பிரேமதாச கேள்வி

Published By: Digital Desk 3

24 Mar, 2021 | 09:44 AM
image

(ஆர்.யசி)

கஜிமாவத்தையில் தொடர் குடியிருப்பு வீட்டுத்தொகுதி தீக்கிரைக்கு உள்ளானமையை அடுத்து அவர்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்க மாட்டோம் எனவும், உரிய இடத்தில் பலகை வீடுகளை அமைத்துக்கொள்ளுமாறும்  நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சபையில் குற்றம் சுமத்திய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கும் தொடர்பாடி வீடுகளை அமைத்துக்கொடுக்குமாறும் வலியுறுத்தினார்.

வட கொழும்பு, மாதம்பிட்டிய கிராமசேவகர் பிரிவுக்கு உற்பட்ட கஜிமாவத்தையில் தொடர் குடியிருப்பு வீட்டுத்தொகுதி தீக்கிரைக்கு உள்ளானமை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினார். 

27 பலகை வீடுகள் தீக்கிரைக்கு உள்ளானமையினால் 200 குடும்பங்கள் நிற்கதிக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணித்துத்தர முடியாது, உரிய இடத்தில் மீண்டும் பலகை வீடுகளை அமைத்துக்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

எனவே இவர்களுக்கு மீண்டும் பலகை வீடுகளை அமைத்துக்கொடுக்காது தொடர்மாடி வீடுகளை அமைத்துக்கொடுக்குமாறு அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தினார்.

இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன ,

இந்த பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். இப்போதும் அது குறித்து ஆராய்ந்து வருகின்றோம். எவ்வாறு இருப்பினும் கடந்த ஆட்சிக் காலத்தில் இவர்களுக்கான வீடுகளை முறையாக அமைத்துக்கொடுக்காதமையே இப்போதும் பிரச்சினைகள் எல காரணமாகும். 

எப்பிடியும் இது குறித்த நிலையான வேலைத்திட்டமொன்றை உருவாக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் இனப்படுகொலையை மறைக்க வேண்டாம்; பட்டலந்த...

2025-03-20 03:16:34
news-image

நான்கு மனித படுகொலைகளுடன் தொடர்புடைய  சந்தேகநபர்...

2025-03-20 03:06:26
news-image

அர்ச்சுனா எம்.பி குறித்த சபாநாயகரின் தீர்மானத்தை...

2025-03-20 02:55:15
news-image

கட்சியின் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காண...

2025-03-20 02:51:31
news-image

ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது...

2025-03-19 16:04:51
news-image

பட்டலந்தவில் சித்திரவதை புரிந்தவர்களுடன் அரசாங்கத்துக்கு ‘டீல்’...

2025-03-19 17:21:51
news-image

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காத உணவகத்திற்கு எதிராக...

2025-03-19 22:52:48
news-image

8 இலட்சத்து 33 ஆயிரம் பேருக்கு...

2025-03-19 21:51:24
news-image

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஜோசப் ஸ்டாலின்...

2025-03-19 17:16:13
news-image

இளைஞர்களுக்கு சந்தர்ப்பமளிக்கவே இம்தியாஸ் பதவி விலகினார்...

2025-03-19 21:49:54
news-image

அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை குறைத்து நிவாரணம் வழங்குங்கள்...

2025-03-19 17:09:52
news-image

இவர் ஒரு குற்றவாளி – ஆனால்...

2025-03-19 22:05:38