நேபாளத்தில் பஸ் ஒன்று 1000 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து கட்டிகே தெவுராலி பிரதேசத்திற்கு 85 பேருடன் பயணித்து கொண்டிந்தபோது  வீதியின் வளைவு ஒன்றில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்துள்ளது.

இந்த விபத்து 33 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், 43 பேர் படுங்காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றன.