நடுநிலை வகித்த இந்தியா ஜெனிவாவில் இலங்கைக்கு மீண்டும் வலியுறுத்தியது இது தான் !

Published By: Digital Desk 4

23 Mar, 2021 | 10:04 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையின் ஒற்றுமை , பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஆதரவு மற்றும் சமத்துவம், நீதி, அமைதி , கௌரவத்திற்கான இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு உறுதியளித்தல் ஆகிய இரு பிராதன தூண்களை மையப்படுத்தியதாகவே எமது நிலைப்பாடுள்ளதாக ஜெனிவாவில் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் சீனத் திட்டம் - இந்தியா இலங்கைக்கு அதிரடியாக அறிவித்தது என்ன ? |  Virakesari.lk

அத்தோடு நல்லிணக்கத்துக்கான செயல்முறையை முன்னெடுத்துச் செல்லவும், தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவும், சகல இன மக்களினதும் அடிப்படை சுதந்திரங்களும் மனித உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யவும் இலங்கை சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்தும் ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும் என்றும் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கனடா, ஜேர்மன் உள்ளிட்ட 6 நாடுகளால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானம் மீதான விவாதத்தோடு நேற்றைய தினம் வாக்கெடுப்புடம் இடம்பெற்றது.

இதன் போது இலங்கை தொடர்பில் உரையாற்றும் போதே இந்தியா இதனை வலியுறுத்தியது.

இலங்கைக்கு அண்டை நாடாக இந்தியா, 2009 ஆம் ஆண்டுக்குப்பின்னர் துரித நிவாரணம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகளுக்கு பல்வேறு பங்களிப்புக்களை செய்துள்ளது.

குறிப்பாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்வாதாரங்களை மீள்கட்டியெழுப்பல் மற்றும் பொருளாதார புத்தெழுச்சி குறித்து அதிக அவதானம் செலுத்தியுள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான கேள்விகளுக்கு இந்தியாவின் அணுகுமுறை இரு தூண்களை அடிப்படைக் கொண்டதாகவுள்ளது.

அதாவது  இலங்கையின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான ஆதரவு என்பன ஒரு தூணாகவும் , சமத்துவம், நீதி, அமைதி , இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பளித்தல் ஆகியவை பிரிதொன்றாகவும் காணப்படுகிறது.

குறித்த இரண்டு குறிக்கோள்களுக்கும் இலங்கை நேரடியாக பங்களிப்பு செய்யும் என்று இந்தியா உறுதியாக நம்புகிறது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கமைய மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதன் மூலமும், அனைத்து மாகாணசபைகளும் திறம்பட செயல்பட முடியும் என்பதை உறுதிசெய்வது உட்பட, அதிகாரப் பகிர்வு குறித்த தனது உறுதிப்பாட்டை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்திற்கான சர்வதேச சமூகத்தின் வலியுறுத்தலை இந்தியா வரவேற்கிறது.

அத்தோடு ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் செயற்பாடுகள் ஐ.நா பொதுச் சபையின் தீர்மானங்களின் ஆணைக்கு இணங்கியதாகக் காணப்பட்ட வேண்டும் என்று இந்தியா நம்புகிறது.

நல்லிணக்கத்துக்கான செயல்முறையை முன்னெடுத்துச் செல்லவும், தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவும், சகல இன மக்களினதும் அடிப்படை சுதந்திரங்களும் மனித உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யவும் இலங்கை சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்தும் ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்...

2025-03-17 05:07:05
news-image

விஜயகுமாரதுங்க உட்பட முக்கிய படுகொலை அறிக்கைகளை...

2025-03-17 04:56:54
news-image

பட்டலந்த சித்திரவதை சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சை...

2025-03-17 05:00:32
news-image

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட வேண்டும்;...

2025-03-17 04:49:16
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை : ...

2025-03-17 04:45:11
news-image

ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக்...

2025-03-16 16:20:41
news-image

அமைச்சர் நளிந்த வரலாற்றை மறந்துவிட்டார் :...

2025-03-16 20:34:58
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை :சட்டமா...

2025-03-16 17:16:42
news-image

நாடளாவிய ரீதியில் அரச தாதியர் சங்கத்தினர்;...

2025-03-16 22:15:49
news-image

அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பாதாளக்...

2025-03-16 17:16:18
news-image

வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும்...

2025-03-16 21:24:04
news-image

நோயாளிகளை சிரமப்படுத்தும் வகையில் செயல்பட்டால், மக்கள்...

2025-03-16 17:18:28