(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை அதிகரிப்பினால் தமிழ், சிங்கள புத்தாண்டை சந்தோசமாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் மக்களுக்கு நிவாரணம் வழங்கி புத்தாண்டை கொண்டாட முடியுமான சூழலை அரசாங்கம் ஏற்படுத்தவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

Articles Tagged Under: திஸ்ஸ அத்தநாயக்க | Virakesari.lk

பாராளுமன்றத்தில் இன்று நிதி அமைச்சின் கீழ் இருக்கும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி(கட்டுப்பாட்டு ) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மக்களுக்கு தாங்க முடியாதளவுக்கு பொருட்களில் விலை அதிகரித்துள்ளது. வரிகுறைப்பு செய்தாலும் அதன் நன்மை மக்களுக்கு கிடைப்பதில்லை.

அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி வரி குறைப்பு செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. அந்த வரிகுறைப்பின் நன்மை மக்களுக்கு கிடைக்கவேண்டும்.

அல்லது வரியினால் அரசாங்கத்துக்கு கிடைக்கவேண்டிய வருமானம் கிடைக்கவேண்டும். இரண்டும் இல்லாமல் இடையில் இருப்பவர்கள் நன்மையடைவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

சீனி இறக்குமதி வரியை 25 சதத்துக்கு குறைத்ததால் அரசாங்கத்தின் வருமானம் 15.9பில்லியன் இல்லாமல் போயிருக்கின்றது.

இதன் நன்மை மக்களுக்கு கிடைத்திருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அது மக்களுக்கு கிடைக்கவில்லை. இன்று பாரியளவில் பொருட்களின் விலை அதிகரித்திருக்கின்றது.

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை சந்தோசமாக கொண்டாடும் சூழல் இல்லை. குறிப்பாக கடளை, பயறு உழுந்து மா போன்றவற்றுக்கு பாரிய தட்டுப்பாடு இருந்து வருகின்றது.

மேலும் விவசாயிகளை பலப்படுத்துவதாக தெரிவித்துக்கொண்டு அரசாங்கம் இறக்குமதி பொருட்களுக்கு தடை விதித்திருக்கின்றது.

அதனால் தான் அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதிசெய்யவேண்டும். அவ்வாறு இல்லாமல் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாது.

அத்துடன் அத்தியாவசிய பொருட்களின் விலை குறடிப்பதாக தெரிவித்த எத்தனையோ வர்ததமானி அறிவிப்புகளை ஜனாதிபதி வெளியிட்டிருக்கின்றார்.

ஆனால் பொருட்களின் விலை குறையவில்லை.அந்த வர்த்தமானி அறிவிப்புக்களுக்குகூட மதிப்பில்லாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்ததுடன் வட்வரியை குறைத்தது. அதன் மூலம் மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.

எனவே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவோ பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தவோ அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் இல்லை.

பணம் அச்சிட்டு பொருளாதாரத்தை பலப்படுத்த முடியாது. ஆனால் அரசாங்கம் பணம் அச்சிடும் விதிமுறைக்கு மாற்றமாக 2020இல் 650மில்லியன் ரூபா அச்சிட்டுள்ளதான் 2021இல் 13.2பில்லியன் ரூபா வரை அது அதிகரித்திருக்கின்றது. அதனால்தன் நாட்டின் பணவீக்கம் அதிகரித்துச்செல்கின்றது என்றார்.