இலங்கை குறித்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் ஜெனிவாவில் ஆரம்பம்

Published By: Digital Desk 3

23 Mar, 2021 | 04:50 PM
image

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில் தீர்மானம் அமைந்துள்ளதாக வாக்கெடுப்பின் போது பிரித்தானியா தெரிவித்துள்ளது.

அத்துமீறிய தலையீடாகவே இலங்கைக்கு எதிரான தீர்மானம் அமைந்துள்ளது எனவும் இலங்கை அதனைகடுமையாக எதிர்ப்பதாகவும் அமர்வில் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் அரசியல்மயப்பட்ட இரட்டை நிலைப்பாட்டையுடையதென  ஜெனிவா அமர்வில் சீனா தெரிவித்துள்ளது.

மனித உரிமைகளை பாதுகாப்பதிலும் பொறுப்புக்கூறலிலும் இலங்கையின் ஈடுபாட்டை தாம் வரவேற்பதாக பாக்கிஸ்தான்  தெரிவித்துள்ளது.

நடுநிலையற்ற இலங்கைக்கு எதிரான  தீர்மானத்தை தாம் எதிர்ப்பதாக ஜெனிவாவில் ரஷ்யா அறிவித்துள்ளது.

இலங்கை தமிழர்களின் அனைத்து வித அபிலாஷைகளுக்கும் மதிப்பளித்து 13 அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துங்கள்  என ஜெனிவாவில்  இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, இலங்கை குறித்த தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனா, பாகிஸ்தான்,பங்களதேஷ்,கியூபா,ரஷ்யா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக ஜெனிவாவில் வாக்களித்துள்ளன.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டதுடன் பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் 14 நாடுகள் நடுநிலையும் வகித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39