இந்தியாவில் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள பூங்காவில் உள்ள நூலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டிருக்கிறது. 

பூங்காவின் மையப்பகுதியில் பெரிய நூலகமும், ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சிறிய அலுமாரிகளில் பயனுள்ள புத்தகங்களும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் நகர மேம்பாட்டுக்காக மாநில அரசு சார்பில் கடந்த 1983 இல் புவனேஸ்வர் மேம்பாட்டு ஆணையம் (பிடிஏ) உருவாக்கப் பட்டது.

இந்த ஆணையமும் பாகுல் அறக்கட்டளையும் இணைந்து புவனேஸ்வரின் பிஜு பட்நாயக் பூங்காவில் புதிதாக நூலகத்தை அமைத்துள்ளன. 

நூலகத்தின் மையப்பகுதியில் அலுமாரிகளுடன் பெரிய நூலக அறை கட்டப்பட்டுள்ளது. பூங்கா முழுவதும் ஆங்காங்கே சிறிய அலுமாரிகளில் புத்தகங்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

பூங்காவுக்கு வரும் பொதுமக்கள், பயனுள்ள புத்தகங்களை எடுத்து படிக்கலாம்.