தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் நடைமுறை குறித்து அறிவிப்பு

Published By: Digital Desk 3

23 Mar, 2021 | 12:48 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருதாக ஆட்களைப்பதிவு செய்யும் திணைக்களம் தெரிவிக்கிறது.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையை வழங்கும் சேவை  தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. 

எனினும், தற்போது அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்கள் வழமைக்கு திரும்பி வருவதால், ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கான முயற்சினை ஆட்களைப் பதிவு  செய்யும் திணைக்களம் முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிடுகிறது.

தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளும் ஒருவர் பத்தரமுல்லையிலுள்ள தலைமைக் காரியாலயத்துக்கு அல்லது தென் மாகாண காரியாலயத்துக்கு வருகை தருவதாக இருந்தால், திகதி மற்றும் எண்ணை  முன்பதிவு செய்வது கட்டாயமாகும். 

இந்தச் சேவையை பிரதேச செயலகத்தின் அடையாள அட்டைப் பிரிவைக் குறிப்பிடுவதன் மூலமோ அல்லது 011 5 226 126 அல்லது 011 5 226 100 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்வதன் மூலமோ பெற்றுக்கொள்ளலாம்.

இதேவேளை, பொதுச் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைகளைப் பெற விரும்பும் நபர்கள், கிராம சேவகர் மூலம் தங்கள் விண்ணப்பங்களை தமக்குரிய பிரதேச செயலகத்தின் தேசிய  அடையாள அட்டைப் பிரிவுக்கு சமர்ப்பிக்க முடியும் என ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

விண்ணப்பங்கள் திணைக்களத்தால் பெறப்பட்டதும், தேசிய அடையாள அட்டை அச்சிடப்பட்டு பதிவுத் தபாலில் விண்ணப்பதாரருக்கு அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிதித்துறை பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்த 150...

2023-12-06 20:24:41
news-image

நீதிமன்ற உத்தரவை மீறியவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர் :...

2023-12-06 20:08:19
news-image

74 க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் பாதுகாப்பற்ற...

2023-12-06 20:17:02
news-image

கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவை...

2023-12-06 20:19:17
news-image

ஸ்பா நிலையங்கள் திறந்த விபச்சார மையங்கள்...

2023-12-06 20:42:15
news-image

நாங்கள் உயிருடன் இருக்கும் வரை தனி...

2023-12-06 21:43:46
news-image

குழந்தைகளுக்கான போஷாக்கு உணவுகளுக்கு வரி அறிவிடுவது...

2023-12-06 20:32:53
news-image

தொல்பொருள் திணைக்களத்துக்கான நிதி ஒதுக்கீடு 39...

2023-12-06 21:35:26
news-image

எரிபொருள் விலைகளில் வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது...

2023-12-06 20:09:25
news-image

மலையக தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களுக்கான...

2023-12-06 20:44:33
news-image

உடல் உறுப்புகளுக்கும் வரி விதிக்கப்படலாம் -...

2023-12-06 19:50:59
news-image

யாரோ ஒருவரது தூண்டுதலிலேயே எனது பேச்சை...

2023-12-06 20:29:42