இலங்கையின் நீதித்துறையில் வெளிப்படை தன்மை அதிகரித்துள்ளதாக உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற சட்டத்தரணிகள் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு நீதித்துறை சுயாதீனமாக செயற்படுகின்றது.

தங்கச்சாவி கொண்டவர்களுக்கு மட்டுமே நீதிமன்ற கதவுகள் திறக்கும் என்ற நிலை மாறி சாதரண மக்களுக்கும் நீதித்துறை சரியாக செயற்படும் வகையில் நீதித்துறையின் செயற்பாடுகள் காணப்படுகின்றதென அவர் மேலும் தெரிவித்தார்.