ஒக்டோபர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களுக்கு இடையில் 1.3 பில்லியன் போலிக் கணக்குகளை நீக்கியுள்ளதாக பேஸ்புக் இன்க் நிறுவனம் திங்களன்று தெரிவித்துள்ளது.

பேஸ்புக் தளத்தில் தவறான தகவல்களைக் கையாள்வதில் 35,000 க்கும் அதிகமானோர் செயற்படுவதாக தெரிவித்துள்ளது.

கொரோனா மற்றும் உலகளாவிய சுகாதார வல்லுநர்கள் கண்டுப்பிடித்த தடுப்பூசிகள் பற்றி தவறான தகவல்களை கொண்ட 12 மில்லியனுக்கும் அதிகமான உள்ளடக்கங்களை அகற்றியதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் பற்றிய தவறான கூற்றுக்கள், சதித்திட்டங்கள்  பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வதை்தளங்களில் அதிகரித்துள்ளன.

தவறான தகவலுக்கான தரவை பேஸ்புக் வெளிப்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கு முன்பு அமெரிக்க பாராளுமன்றத்தின் கீழ் அவையின் (United States Congress), எரிசக்தி மற்றும் வணிகத்துக்கான நிலைக்குழுவினர் (United States House Committee on Energy and Commerce)  பேஸ்புக் உள்ளிட்ட தொழில்நுட்ப தளங்கள் தவறான தகவல்களை எவ்வாறு கையாளுகின்றன என்பதைப் பற்றி ஆராய்கின்றனர்.