இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் 3 ஆம் நாள் ஆட்ட நிறைவின் போது இலங்கை அணி 22 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டினை இழந்துள்ளது.

2 ஆம் நாள் முடிவின்போது 141 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டினை இழந்த நிலையில் 3 ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸி அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 379 ஓட்டங்களை பெற்றது.

ஆஸி அணி சார்பில் ஷோர்ன் மார்ஷ் 130 ஓட்டங்களையும், சுமித் 119 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் ஹேரத் 81 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

24 ஓட்டங்கள் பின்னடைவில் இருந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆட்டநேர முடிவின்போது 1 விக்கட்டினை மாத்திரம் இழந்து 22 ஓட்டங்களை பெற்றுள்ளது.

பெரேரா 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துள்ள நிலையில், கருணாரத்ன 8 ஓட்டங்களுடனும், கௌசல் சில்வா 6 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஆஸி அணி சார்பில் மிச்சல் ஸ்டார்க் 1 விக்கட்டினை கைப்பற்றியுள்ளார்.