இலங்கை அமராபுரா மகா நிகாயா, அகமஹா பண்டித கோட்டுகொட தம்மவாச மகா தேரரின் இறுதி சடங்குகள் வியாழக்கிழமை சுதந்திர சதுக்கத்தில் அரச ஆதரவின் கீழ் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்னா தெரிவித்தார்.

அதன்படி வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு கல்கிஸ்ஸ தர்மபாலராம விகாரையில் இருந்து தேரரின் பூதவுடல் எடுத்துச் செல்லப்படும்.

கோட்டுகொட தம்மவாச மகா தேரரின்  பூதவுடன் தற்போது பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக கல்கிஸ்ஸ தர்மபாலராம விகாரையில் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அமராபுரா மகா நிகாயா மகாநாயக்கர் அதிசங்கைக்குரிய கோட்டுகொட தம்மவாச மகா தேரர் நேற்று அதிகாலை3 மணியளவில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் காலமானமையும் குறிப்பிடத்தக்கது.