லோகன் பரமசாமி
சமகால பூகோள அரசியலில் அமெரிக்கவின் சர்வதேச அணுகுமுறையில், மிக விரைவானதும் பாரியதுமான திருப்பமொன்று நிகழ்ந்து வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன. இந்த மாற்றம் பாதுகாப்பு துறையிலும் வர்த்தகம் மனித உரிமை, சர்வதேச போக்குவரத்து, சுகாதாரம், புணர்வாழ்வு ஆகிய பல தரப்பு அமெரிக்க உறவு பெருவல்லரசுகளின் மத்தியிலும் சர்வதேச அலகுகள் மத்தியிலும் உருவாக்கப்பட்டு கடந்த காலங்களில் இருந்து மறுசீரமைக்கப்பட்டு, மீள் ஒழுங்கு செய்யும் வகையில் அணுகப்படவுள்ளது.
இந்த மீள் ஒழுங்குகள் யாவும் 2021ஆம் ஆண்டில் புதிய அமெரிக்க ஜனாதிபதியின் தலைமைத்துவத்துடன் ஆரம்பமாகி இருப்பதாக அறிவிக்கப்படுகிறது. இன்றைய பூகோள அரசியல் நில அமைவைச் சரியாக புரிந்து கொண்டு ஒவொரு துறைகளுக்கும் மதிப்பு அடிப்படையிலான பலதரப்பு உறவு கொள்கையை வடிவமைத்தல் என்னும் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
பலதரப்பு உறவு நிலை முன்னைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரெம்பினால் கைவிடப்பட்டு இரு தரப்பு உறவும் “அமெரிக்கா முதல்” என்ற தான் தோன்றித்தனமான கொள்கையுமே கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில் புதிதாக பதவி ஏற்ற ஜனாதிபதி ஜோ பைடன் பலதரப்பு உறவ முறையை மீண்டும் வலுவடையச் செய்வதன் மூலம் சர்வதேச அரச நிறுவனங்களில் அமெரிக்கா வெளித்தரப்பாக இல்லாது அந்த நிறுவனங்களை வழிநடாத்தும் ஒரு முன்னனி தேசமாக தன்னை உருவாக்கி கொள்வதில் அதிக நாட்டம் செலுத்துகிறது.
அமெரிக்காவின் கடந்த ஆட்சி நிர்வாகம் குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையிலிருந்தும் உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்தும் ஐக்கிய நாடுகள் பொருளாதார சமூக கலாசார நிறுவனத்திலிருந்தும் (யுனெஸ்கோ) ஐக்கிய நாடுகள் புணர்வாழ்வு குறித்த விவகாரங்களுக்கான கட்டமைப்பிலிருந்தும் தன்னை நீக்கம் செய்து கொண்டது.
அதேபோல சர்வதேச ஒப்பந்தங்கள் பலவற்றிலிருந்தும் அமெரிக்கா தனது செலவை குறைத்து கொள்ளுதல் என்ற வகையில் தன்னை நீக்கம் செய்து கொண்டது. இதிலும் குறிப்பாக பாரீஸ் காலநிலை ஒப்பந்தம், கடல் கடந்த பசுபிக் கூட்டுறவு ஒப்பந்தம், திறந்த வானம் குறித்த உடன்படிக்கை, ஈரானை கண்காணிக்கும் விரிவாக்க கூட்டு செயற்றிட்டம், நாடுகளுக்டையிலான அணுசக்தி திட்டம் ஆகியவற்றுடன் இராஜதந்திர உறவுகள் குறித்த ‘வியன்னா’ விருப்ப நெறிமுறை உறவுகள் குறித்த ஒப்பந்தம், இடப்பெயர்வு கட்டமைப்பு என்று பல்வேறு ஒப்பந்தங்களில் இருந்தும் அமெரிக்கா தன்னை வெளியேற்றி இருந்தது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-21#page-10
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM