மலையகத்தை சகல துறைகளிலும் முன்னேற்றமடைய செய்வோம் - இலங்கை - இந்திய சமுதாயப் பேரவை தலைவர்

Published By: Digital Desk 3

22 Mar, 2021 | 05:31 PM
image

(செய்திப்பிரிவு)

இலங்கை - இந்திய சமுதாயப் பேரவை பின்தங்கியுள்ள மலையகத்தை சகல துறைகளிலும் முன்னேற்றுவதற்கான சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளது. மலையகத்திற்கு சேவையாற்றும் ஏனைய நிர்வாகங்களுடன் இணைந்து வெற்றிகரமான சேவைகளை முன்னெடுப்பதற்கு வாழ்த்துவதாக பேரவையின் தலைவர் கட்டிடக்கலை நிபுணர் ராஜு சிவராமன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,

இலங்கை - இந்திய சமுதாயப் பேரவை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமானால் ஸ்தாபிக்கப்பட்டதாகும். இலங்கையிலுள்ள இலங்கை - இந்திய சமூகத்தினர் அனைவரையும் இணைத்து இந்திய வம்சாவளி மக்கள் , நகர்புறங்களில் தொழில் வழங்குனர்கள் , புத்தி ஜீவிகள் மற்றும் தொழிலதிபர்கள் சகலரையும் இணைத்து 1980 களில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இலங்கை - இந்திய சமுதாயப் பேரவை என்ற இந்த அமைப்பினூடாக கடந்த 40 ஆண்டுளாக மலையகத்தில் பல மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கான தேவை கருதி நிதியுதவியளித்து அவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்புக்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

சௌமிய மூர்த்தி தொண்டமானின் மறைவிக்கு பின் முன்னாள் பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்னண் தலைமையின் கீழ் தொடர்ந்தும் மலையக மக்களின் பல்துறைசார் எழுச்சிக்காக திட்டங்கள் வகுக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது.

இதன் பின்னர் இலங்கை - இந்திய சமுதாயப் பேரவையின் தலைமைத்துவத்திற்கு மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த காலப்பகுதியில் பல பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அனைத்து வகையில் மலையகத்தில் அபிவிருத்திகள் ஏற்பட வேண்டும் என்ற இலட்சிய பாதையிலேயே பேரவையின் அனைத்து திட்டங்களும் வகுக்கப்பட்டது.

அந்த வகையில் இலங்கை - இந்திய சமுதாயப் பேரவையின் தலைவராக நான் செயற்படுவதுடன் துணை தலைவராக அமைச்சர் ஜீவன் தொண்டான் உள்ளார்.

நவீன காலத்தின் சவால்களை மலையக மாணவ சமூகம் எதிர்கொள்ள கூடிய வகையில் அவர்களை கல்வி திட்டங்கள் ஊடாக வலுப்படுத்துவதை முக்கிய குறிக்கோளாக கொண்டு பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

மலையக பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு இலங்கை - இந்திய சமுதாயப் பேரவை மூலம் பல உதவிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கு பரீட்சைக்கு தோற்றுவது தொடர்பான மீட்டல் பயிற்சிகள் , கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகத்திற்கு தெரிவான  45 மலையக மாணவர்களுக்கு தேவையான நிதியுதவியை மாதாந்தம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாணவர்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான வேலைத்திட்டம் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் மூலம் மலையக பாடசாலைகளிலிருந்து 125 மாணவர்களை தெரிவு செய்து இலங்கை - இந்திய சமுதாயப் பேரவையின் அங்கத்தவர்களின் நிதியுதவி திட்டத்தின் கீழ் கல்வி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

அது மாத்திரமின்றி மலையகத்திலுள்ள இளம் சந்ததியினருக்கான கைத்தொழில் பயிற்சிகள் தொண்டமான் நிலையத்துடன் இணைந்து இப் பேரவையினால் வெற்றிகரமாக அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.

இதனை அடுத்தடுத்த கட்டங்களிலும் முன்னெடுத்து மலையக மாணவ சமூகத்தின் தொழில் திறன் விருத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கொவிட் பரவலுக்கு மத்தியில் மலையக பாடசாலைகளுக்கு நவீன வகுப்பறைகள் தேவைப்படும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் அவற்றை நிர்மாணிப்பதற்கும் உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளும் எமது  பேரவையினால் முன்னெடுக்கப்படுகின்றன.

அதற்கமைய இதன் முதற்கட்டமாக நாவலபிட்டி கதிரேஷன் மத்திய கல்லூரியில் நவீன வகுப்பறைகள் ஸ்தாபிக்கப்பட்டு கடந்த வாரம் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளக்காக வழங்கப்பட்டது.

அத்தோடு டயகம பகுதியிலும் இவ்வாறு புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன வகுப்பறை திறந்து வைக்கப்படவுள்ளது. இவை மாத்திரமின்றி பல்துறைசார் கல்வியல் மையங்களை அமைப்பதற்காக   காணிகளை ஒதுக்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பின்தங்கியிருக்கும் மலையகத்தை கல்வியால் முன்னேற்றுவதற்கு இப் பேரவை முழு முயற்சியுடன் செயற்படுகிறது.

மேலும் பல பாடசாலைகளில் அத்தியாவசிய தேவைகளாக கருதக்கூடிய மலசலகூடங்கள் மற்றும் குடிநீர் பிரச்சினைகள் உள்ளன.

எனவே இந்த பிரச்சினைகளுக்கான தீர்வை வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மலையத்திற்காக சேவையாற்றும் ஏனைய  நிர்வாகங்களுடனும் இணைந்து எமது சேவைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39