வீர, வீராங்கனைகளுக்கு மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா

Published By: Digital Desk 3

22 Mar, 2021 | 04:34 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

2022  ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா மற்றும் பொதுநலவாய விளையாட்டு விழா ஆகியவற்றை மையப்படுத்தி தேசிய குழாத்தில் அங்கம் வகிக்கும் வீர, வீராங்கனைகளுக்கு மாதாந்தம் ஒரு லட்சம் ரூபா வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் யோசனைக்கமைய செயற்படுத்தபடவுள்ள இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக வீர, வீராங்கனைகளை தொழிற்சார் ரீதியில் தயார்படுத்தி, அவர்களை சர்வதேச தரத்தில் பதக்கங்களை வென்றெடுக்கச் செய்வதே பிரதான நோக்கமாகும்.

அந்தவகையில், மெய்வல்லுநர், பளுதூக்கல்,குத்துச் சண்டை, ஜூடோ, நீச்சல், பெட்மின்டன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பரா போட்டிகளிலிருந்து 60 பேருக்கு மாதாந்த கொடுப்பனவாக ஒரு லட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது.

போட்டியாளர்கள், தங்களை மேலும் திறம்பட வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சி நடவடிக்கைகளுக்காகவே இந்த ஒரு லட்சம் ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதுடன், போஷாக்கு மட்டத்தை அதிகரித்துக்கொள்வதற்காக போஷாக்கு கொடுப்பனவாக 25 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35