(லியோ நிரோஷ தர்ஷன்)

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர் கட்சியின் தென் கொரியாவிற்கான விஜயம் வெற்றியளித்துள்ளது. அந்நாட்டின் அரச தலைவர்கன் மற்றும் இலங்கையர்களுடன் ஆக்கப்பூர்வமான பேச்சு வார்த்தைகயில் ஈடுப்பட்டதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். 

நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகள் மற்றும் நாட்டிற்கு எதிரான நெருக்கடியான நிலைமைகள்  தொடர்பில் அந்த நாடுகளில் வாழும் இலங்கையர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர் எனவும் பேராசிரியர் குறிப்பிட்டார். 

பத்தரமுல்லை - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்  மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சுய நல அரசியலுக்காக கூட்டு எதிர் கட்சியினர் தென் கொரியாவிற்கு செல்லவில்லை. உலக நாடுகளில் உள்ள இலங்கையர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க விரும்புகின்றனர். அதே போன்று அவர்கள் சமகால சூழல் தொடர்பில் அறிந்துக் கொள்ள விரும்புகின்றனர். இந்நிலையிலேயே நாங்கள் தென் கொரியாவிற்கு சென்றிருந்தோம். 

சுமார் 400 ஆயிரம் இலங்கையர்கள் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர். பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டோம். அதே போன்று அந்நாட்டு அரசியல் தலைவர்களையும் சநதித்தோம். தென் கொரியாவிற்கான இலங்கையர்களின் வேலை வாய்ப்பு விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய சேவை மகத்தானது. இதனை பல்வேறு சந்திப்புகளின் போது அவதானத்திற்கு உட்பட்டது என குறிப்பிட்டார்.