“ எக்கம லே ” அமைப்பு ஏற்பாடுசெய்த ஆர்ப்பாட்டமொன்றை சிங்ஹ லே அமைப்பு குழப்பமுயன்றதால் அவ்விடத்தில் பதற்றநிலை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் சிங்ஹ லே என்ற பதம் எழுதப்பட்ட பதாகையை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடோர் ஏந்தியதாலேயே சிங்ஹ லே அமைப்பு அவ்விடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்திலேயே இக் குழப்பநிலை தோன்றியுள்ளது.

இந்நிலையில் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.