(செ.தேன்மொழி)
அமெரிக்காவின் மிலேனியம் சவால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமலிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின் சார்பில் முன்னிலையாகியிருந்த மேலதிக சொலிஸ்டர் ஜெனரால் உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இலங்கையின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் முன்வைக்கபட்டுள்ள , அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் மற்றும் சோபா ஒப்பந்தத்தில் , அரசாங்கம் கைச்சாத்திடுவதை தடுப்பதற்காக இடைக்கால தடை உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு குறிப்பிட்டு அரச வைத்திய அதிகாரிகளால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் , இந்த மனு இன்று திங்கட்கிழமை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் , இதன்போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையாகியிருந்த , மேலதிக சொலிஸ்டர் ஜெனரால் இலங்கை அரசாங்கம் மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்திலும் , அமெரிக்க இராணுவத்தினர் இந்நாட்டில் இராணுவ பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அனுமதி வழங்குவதற்கான சோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கும் தீர்மானம் எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த மனுக்கள் தொடர்பான பரிசீலனைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ள உயர்நீதிமன்றம் , அதன்போது இந்த தீர்மானங்கள் தொடர்பான எழுத்து மூல ஆவணங்களை மன்றில் சமர்பிக்குமாறு மேலதிக சொலிஸ்டர் ஜெனராலுக்கு உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM