ஏன் இந்த அவசரம் ?

Published By: J.G.Stephan

22 Mar, 2021 | 10:45 AM
image

-சத்ரியன்


அவசர அவசரமாக மாகாண சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை அரசாங்கத் தரப்பு மேற்கொண்டு வருகிறது. பெரும்பாலான மாகாணசபைகளின் ஆயுட்காலம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகின்றன.

இந்தக் காலப்பகுதியில் மாகாண சபைகள் மத்திய அரசினாலேயே நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில், எதற்காக இவற்றுக்குத் தேவையின்றி தேர்தல் நடத்த வேண்டும் என அரசாங்கத்தில் உள்ள சிலர் கேள்வி எழுப்பினர்.

சிலர் இதனை ‘வெள்ளை யானை’ என்றனர். மாகாணசபைகளும், 13 ஆவது திருத்தச் சட்டமும் தான் நாட்டை பிளவுபடுத்துகின்றன என்றும் கூறினர். அதிகாரப் பகிர்வே தேவையில்லை என்றும் வாதிட்டனர்.

அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சர்கள் வெளியிட்ட இந்தக் கருத்துக்களால், இனி மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாது என்ற அச்சம் எழுந்தது.

இன்னொரு பக்கத்தில், புதிய அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச்சட்டத்தின் அம்சங்கள் முற்றாகவே நீக்கப்பட்டு விடும், அதனையும் இழந்து விட்டு நிற்க வேண்டிய அவலம் வரப்போகிறது என்று பலரும் புலம்பிக் கொண்டிருந்தனர்.

தற்போதைய அரசாங்கத்துக்குள் தேசியவாத சக்திகள் வலுவாக காலூன்றியுள்ள நிலையில், அவர்களே தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ள நிலையில்,  மாகாணசபைகள் போன்ற அதிகாரப்பகிர்வு முறைமைகள் பெரும் ஆபத்துக்குள்ளாகியிருக்கின்றன என்பது உண்மையே.

மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் போதியளவில் இல்லை என்பதும், இருக்கின்ற அதிகாரங்களைக் கூட பயன்படுத்த முடியாமல் தடுக்கப்பட்டிருந்தன என்பதும் வேறு கதை.

இவ்வாறான நிலையில் இப்போது அரசாங்கம் அவசரமாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்த ஆயத்தமாகிறது. இது ஒன்றும் நினைத்தவுடன் நடக்கக் கூடிய காரியமல்ல.

ஏனென்றால் ரணில் - மைத்திரி கூட்டு அரசாங்கம், மாகாண சபைகளின் தேர்தல் முறையில் சீர்திருத்தம் செய்வதற்கான சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-21#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04