இவ் ஆண்டின் மிகப்பெரிய கோள் பூமியை கடந்தது

By Vishnu

22 Mar, 2021 | 08:57 AM
image

இந்த ஆண்டின் மிகப்பெரிய சிறுகோள் நேற்றிரவு 9.00 மணியளவில் பூமியை கடந்து சென்றுள்ளது.

2001 FO32 என அழைக்கப்படும் விண்வெளி பாறை கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் அகலமானது. இது உலகின் மிக உயரமான சிலையான இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை விட இரு மடங்கிற்கும் அதிகமாகும்.

2001 FO32 என அழைக்கப்படும் இந்த கோள் பூமியிலிருந்து 1.25 மில்லியன் மைல்கள் தூரத்தில் (பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட ஐந்து மடங்கு அதிகமாகம்) பூமியை கடந்து சென்றுள்ளது.  

பெரும்பாலான விண்கற்கள் பூமியை கடந்து செல்லும் வேகத்தை விட 2001 FO32 இன் வேகம் அதிகமாகும். அதன்படி ஒரு மணி நேரத்திற்கு சுமார் 124,000 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்று நாசா கூறியிருந்தது.

20 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிறுகோள் சுமார் 900 மீட்டர் (3,000 அடி) விட்டம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

440 மீட்டர் முதல் 680 மீட்டர் வரை அகலம் கொண்ட இந்த சிறுகோளின் வேகம் மணிக்கு 123,876 கிலோமீட்டர் ஆகும்.

அடுத்த முறை 2001 FO32 சிறுகோள் 2052 ஆம் ஆண்டில் பூமியை அண்மித்து பயணிக்கும் என்றும் நாசா கூறியுள்ளது.

66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பாரிஸ் என்ற கோள் பூமியில் மோதுண்டு, கிரகத்தின் 75 சதவீத உயிர்களை அழித்ததாகவும் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right