வடமேற்கு சிரியாவில் ரஷ்ய ஜெட் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள சர்மதா நகரம் மற்றும் தெற்கில் ஹடாய் மாகாணத்தின் ரெய்ஹான்லி மாவட்டம் ஆகியவற்றுக்கு இடையேயான பாப் அல்-ஹவா எல்லைக் கடக்கும் பகுதியில் உள்ள எம் 4 நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள ஒரு பகுதியிலேயே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மத்தியதரைக் கடலில் இருந்து ஏவப்பட்ட ஒரு ஏவுகணை, துருக்கியுடனான இட்லிப்பின் எல்லையிலிருந்து 3 கிலோமீட்டர் (1.8 மைல்) தொலைவில் உள்ள கா கிராமத்தில் அமைந்துள்ள சிரிய தேசிய இராணுவ தலைமையகத்திற்கு அருகே தரையிறங்கியதாகவும் கூறப்படுகிறது.

தாக்குதல்களைத் தொடர்ந்து, இட்லிப்பில் உள்ள பாதுகாப்பு குழுக்கள் தீயை அணைக்க முயற்சிகளைத் தொடங்கின.

முந்தைய நாள் இட்லிப்பில் பஷர் அல்-அசாத் ஆட்சிப் படைகள் மற்றும் ஈரான் ஆதரவு பயங்கரவாதக் குழுக்கள் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை மற்றும் ஒரு பெண் உட்பட குறைந்தது 6 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்துமிருந்தனர்.

துருக்கிக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு விரிவாக்க மண்டலத்தின் தளம் இட்லிப் ஆகும். 

இந்த பகுதி பல போர்நிறுத்த புரிந்துணர்வுகளுக்கு உட்பட்டது, அவை அசாத் ஆட்சி மற்றும் அதன் கூட்டாளிகளால் அடிக்கடி மீறப்படுகின்றன.

பஷர் அல்-அசாத் ஆட்சி எதிர்பாராத மூர்க்கத்தனத்துடன் ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்களை முறியடித்த 2011 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சிரியா ஒரு மோசமான உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ளது.

பின்னர் 5 மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.