வடக்கு, கிழக்கு தொடர்பில் விசேட கரிசனை அவசியம் ; ஜனா­தி­பதி விசேட செவ்வி (பகுதி -2)

Published By: Priyatharshan

15 Aug, 2016 | 04:55 PM
image

கேள்வி அரச நிறு­வ­னங்கள் தனியார் மயப்­ப­டுத்­தப்­ப­டுமா?

பதில் : பல்­வேறு அரச நிறு­வ­னங்­களில் 15, 20 வரு­டங்­க­ளுக்கு மேலாக ஊழி­யர்­க­ளுக்கு சம்­பளம் வழங்­கப்­ப­டு­கி­ன்றது. ஆனால் இந்த நிறு­வ­னங்­களில் வேலை நடை­பெ­று­வ­தில்லை. இவ்­வா­றாக பல நிறு­வ­னங்கள் உள்­ளன. இது தொடர்­பாக அமைச்­ச­ர­வையில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இவ்­வா­றான நிறு­வ­னங்­களை தனியார் நிறு­வ­ன­மொன்­றிற்கு வழங்­கு­வதில் தவறு இல்லை. சில அரச நிறு­வ­னங்கள் இலாபம் ஈட்டும் நிறு­வ­னங்­க­ளாக உள்­ளன. எனவே லங்கா வைத்­தி­ய­சாலைஇ லிட்ரோ கேஸ் போன்ற நிறு­வ­னங்கள் தனியார் மய­மாக்­கப்­ப­ட­மாட்­டாது.

கேள்வி புதிய அர­சி­ய­ல­மைப்பு மர­ணப்­பொறி என்று கூறு­கின்­றரே?

பதில் : புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக மக்கள் கருத்து அறியும் ஆணைக்­கு­ழு­வுக்க பல்­வே­று­பட்ட கருத்­துக்கள் கிடைத்­துள்­ளன. இதில் மதச் சார்­பற்ற நாடுஇ ஒரினச் சேர்க்கை தொடர்­பாக என பல்­வே­று­பட்ட கருத்­துக்கள் மக்­களால் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இவை மக்­களின் கருத்­துக்­களே தவிர அர­சி­ய­ல­மைப்பு அல்ல. இது தொடர்­பாக வெ ளியான அறிக்­கையை வைத்துக் கொண்டே சிலர் பொய்­யான பிர­சாங்­களை மேற்­கொள்­கின்­றனர். நாட்டின் அர­சி­ய­ல­மைப்பு ஒன்­றினை உரு­வாக்­கும்­போது கலா­சார ரீதி­யான பின்­ன­ணியை கருத்திற் கொள்­வது அவ­சி­ய­மாகும். எனவே புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் தேர்தல் முறை மாற்­ற­ம­டை­யும்­போது அர­சி­ய­ல­மைப்பு மாற்­றப்­பட வேண்டும். ஜனா­தி­பதி அதி­கா­ரங்கள் நீக்­கப்­ப­டு­வது தொடர்பில் தெரி­விக்­கப்­பட்­டது. இது புதிய அர­சி­ய­ல­மைப்பில் மாற்­றப்­பட வேண்டும். மனித உரி­மைகள் அடிப்­படை உரி­மைகள், சுதந்­திரம், ஜன­நா­யகம் இவற்­று­ட­னான புதிய சிந்­த­னைகள் உள்­ள­டக்­கிய ஜன­நா­யக அர­சி­ய­ல­மைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமை பத­வியை நான் பலாத்­கா­ர­மாக பெற்றுக் கொள்­ள­வில்லை. பழைய தலை­வர்கள் கட்­சியின் தலைமைப் பத­வியை பெறுப்­பேற்­கு­மாறு கூறி­ய­த­னா­லேயே நான் பொறுப்­பேற்றேன். தலைமைப் பத­வியை ஏற்றுக் கொண்­டதன் பின்னர் சிலர் என்­காலைப் பிடித்து இழுக்­கின்­றனர். உள்­ளூ­ராட்சி சபைத்தேர்­தலில் போட்­டி­யிட விண்­ணப்­பித்­த­வர்கள் கடி­தங்­களை தீ வைக்­கின்­றனர். இவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்­த­வர்கள் அல்ல.

இணக்­கப்­பாடு அர­சி­யலை மேற்­கொள்­ளும்­போது இரண்டு பிர­தான கட்­சி­களின் தனித்­து­வத்தை பாது­காத்துக் கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இவ் இரண்டு பிர­தான கட்­சி­களும் தமது கொள்­கை­க­ளையும் சித்­தாந்­தங்­க­ளையும் பாது­காக்­காமல் பல­வீ­ன­ம­டை­வது நல்­ல­தல்ல. நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் முன்­னு­ரிமை கொடுத்த பின்­னரே கட்­சிக்கு முன்­னு­ரிமை கொடுக்க வேண்டும். இரண்டு கட்­சி­களும் இணைந்து நல்­லதோர் சிந்­த­னை­யினை முன்­னெ­டுப்­பதில் நாட்டம் காட்ட வேண்டும்.

கேள்வி மஹிந்த தலை­மையில் சுதந்­திரக் கட்சி மாநாடு நடத்­தப்­படும் என்று கூறப்­ப­டு­கின்­றதே?

பதில்: ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் 65 மாநாட்­டினை குரு­ணா­கலில் நடத்த கட்­சியின் மத்­திய குழு தீர்­ம­னித்­துள்­ளது. இதன்­போது அனை­வ­ருக்கும் அழைப்­பு­வி­டுக்­கப்­படும். வேறு யாரா­வது எங்­கா­வது கட்­சியின் மாநாட்­டினை நடத்­து­கின்­றார்­க­ளான என­எ­னக்கு தெரி­யாது . அதுவும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யா­க­தான இருக்கும்.புதிய ஒன்­றாக இருக்­காது. எனவே அது ஒரு பிரச்­சினை அல்ல. நாம் யாரையும் வெ ளியேற்ற மாட்டோம். நாம் அனை­வ­ருக்கும் அழைப்பு விடுத்­துள்ளோம். எனவே இம் மாநாட்­டிற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன. செப்டம்பர் 4 ஆம் திகதி சிறப்பான ஒரு மாநாட்டினை நடத்திக் காட்டுவோம்.

கேள்வி : முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கூறுவதைகேட்டு நீங்கள் செயற்படுவதாக கூறப்படுகின்றதே?

பதில்: அவ்வாறு ஒன்றும் இல்லை. குறிப்பாக மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட இந்திரஜித் குமாசுவாமி விடயத்தில் சந்திரிக்கா தலையிட இல்லை . அவருக்கும் எதுவுமே தெரியாது. இவ்வாறான கருத்துக்களை திட்டமிட்ட சிலர் வெ ளியிடுகின்றனர். அத்துடன் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சந்திரிக்காவுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளையும் நடத்வில்லை.

பாரிய ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். எனவே தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அவை முடிந்த பின் நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாட்டில் சடடம் உள்ளது. அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் ஒழுக்கத்துடன் செயற்படுவோம். நாங்கள் பலிவாங்கவில்லை. சட்டத்தின்படியே அனைத்தும் நடக்கின்றது.

கேள்வி : உள்ளூராட்சி தேர்தல் எப்போது நடைபெறும்?

பதில் : எல்லை நிர்ணயங்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. எனவே தற்போது அனைத்தும் சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் ஆராய ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை கிடைத்ததும் தேர்தல்கள் நடத்தப்படும்.

கேள்வி : பாதயாத்திரை குறித்து?

பதில் : பாதயாத்திரையினால் அரசாங்கம் பலம் அடைந்தது. இதனால் பாதயாத்திரை நடத்தியவர்கள் பலவீனம் அடைந்ததுடன் அரசாங்கத்திற்கு சவாலாகவும் அமையவில்லை. அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகவோ பாதயாத்திரை நடைபெறவில்லை. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவு படுத்துவதற்காகவே இது நடத்தப்பட்டது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சி அதிகம் மகிழ்ச்சி அடைந்தது. அவர்கள் சுதந்திரக் கட்சி அழிந்துவிட்டது என்று நினைத்ததுடன் பாதயாத்திரை சென்றவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு சவால்விடுத்தனர் கட்சி தலைமையகத்திற்கு முன்பாக கூச்சலிட்டனர். இது தொடர்பாக பேசுவதற்கு நான் விரும்பவில்லை. இப் பாதயாத்திரைக்கு பின்னால் எனது நடவடிக்கைகளையும் மாற்றிக கொள்வதற்கு நான் தீர்மானித்தேன். எனவே அரசின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் கட்சியின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் நாடு மற்றும் மக்கள் தொடர்பாகவும் நான் செய்யும் அர்ப்பணிப்புக்களில் இப் பாதயாத்திரையின் பின்னர் பலம் அடைந்துள்ளது. இது தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதுமை இயலாமையின் அடையாளம் அல்ல

2023-10-02 17:17:52
news-image

ஊட்­டச்­சத்து குறை­பாட்டில் உயர் மட்­டத்தில் நுவ­ரெ­லியா...

2023-10-02 17:18:14
news-image

அங்கீகரிக்க மறுத்தலை அடையாளமாக்குவோம்....!

2023-10-02 15:24:56
news-image

வடக்கு மாகாண சுற்றுலாத்துறைக்கு புத்துயிரூட்டிய 'கோடிலியா'

2023-10-02 15:24:27
news-image

2022ஆம் ஆண்டு நூறு கோடி ரூபாய்...

2023-10-02 13:35:16
news-image

இந்தியாவை கண்காணிக்கும் ஐந்து கண்கள்!

2023-10-02 09:09:54
news-image

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் 

2023-10-01 19:13:25
news-image

நீதி­பதி சர­வ­ண­ரா­ஜாவின் வெளி­யேற்றம் : பேரி­ன­வாதம்...

2023-10-01 19:15:04
news-image

பேரா­யரும் மைத்­தி­ரியும்

2023-10-01 19:15:29
news-image

மழை விட்டும் நிற்­காத தூவானம்

2023-10-01 19:15:56
news-image

வலிந்து மூக்கை நுழைத்த அலி சப்ரி

2023-10-01 19:16:10
news-image

மனித புதை­குழி அகழ்­வு­க­ளுக்கு போட்­டி­யாக தங்க...

2023-10-01 19:17:30