ஜனாதிபதியால் சுட்டிக்காட்டப்பட்ட போலி முகப்புத்தக கணக்கு தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு

21 Mar, 2021 | 08:29 PM
image

(எம்.மனோசித்ரா)

'ஜே.வி.பி. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்' என்ற பெயரில் போலியான முகப்புத்தக கணக்கு உருவாக்கப்பட்டு அதன் ஊடாக போலிஸ் செய்திகள் பரப்பப்படுவதாகத் தெரிவித்து இன்று ஞாயிறுக்கிழமை மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சட்டத்தரணி சுனில் வடகல ஆகியோரால் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று சனிக்கிழமை பங்குபற்றி கிராமத்துடன் கலந்துரையாடல் செயற்திட்டத்தின் போது 'ஜே.வி.பி. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்' என்ற முகப்புத்தக கணக்கில் சுற்றுச்சூழல் அழிப்பு தொடர்பாக போலியான செய்திகள் வெளியிடப்படுவதாகத் தெரிவித்து , ஜே.வி.பி. தொடர்பில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். 

குறித்த முகப்புத்தக கணக்கு தொடர்பில் இன்றையதினம் குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடளித்ததன் பின்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நுவரெலியாவில் கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்து தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடளித்துள்ளோம். 

இதன் போது 'ஜே.வி.பி. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்' என்ற முகப்புத்தக கணக்கின் ஊடாக போலியான செய்திகள் பரப்பபடுகின்ற என்று ஜனாதிபதி தெரிவித்தார். எனினும் இந்த முகப்புத்தக கணக்கிற்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

இந்த கருத்தியை கோட்டாபய ராஜபக்ஷ என்ற தனியொரு நபர் தெரிவித்திருந்தால் நாம் முறைப்பாடளித்திருக்க மாட்டோம். எனினும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி நாட்டு மக்கள் மத்தியில் ஊடகங்கள் மத்தியில் இவ்வாறான கருத்தை தெரிவித்தமையால் நாம் முறைப்பாடளித்துள்ளோம். 

இந்த முகப்புத்தக கணக்கு கடந்த 6 தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 'ஜே.வி.பி. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்' என்று இந்த கணக்கு ஆரம்பிக்கப்பட்டிருந்ததால் , ஜே.வி.பி. ஊடகப்பிரிவு இது தொடர்பில் பேஸ்புக் நிறுவனத்திற்கு கடந்த 18 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. அதனையடுத்து 19 ஆம் திகதி குறித்த கணக்கு பேஸ்புக் நிறுவனத்தினால் முடக்கப்பட்டது.

இவ்வாறு போலி கணக்கு என உறுதிப்படுத்தப்பட்டு பேஸ்புக் நிறுவனத்தினால் முடக்கப்பட்ட கணக்கில் இடப்பட்ட பதிவுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு காண்பித்து ஜே.வி.பி. போலி செய்திகளை பரப்புவதாகக் கூறியுள்ளார். 

இது தொடர்பான உண்மை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். காரணம் இந்த கணக்கு நிதி வழங்கி உருவாக்கப்பட்டிருப்பதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே இது தொடர்பில் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறின்றி எம்மால் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளைப் போல இந்த முறைப்பாடும் புறந்தள்ளப்படுமாயின் இது ஜனாதிபதி மற்றும் அவரின் ஊடகப்பிரிவிற்கு தெரிந்தே முன்னெடுக்கப்பட்ட செயற்பாடு என்ற முடிவிற்கு வர வேண்டியேற்படும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58