எம்.எஸ்.தீன்
இலங்கை முஸ்லிம்களின் மீதான நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. முஸ்லிம்களின் மத அடிப்படையிலான செயற்பாடுகளை கேள்விக்குட்படுத்தும் நடவடிக்கைகள் முஸ்லிம்களை மன வேதனைக்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன.
முஸ்லிம்களை பயங்கரவாதிகள், நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்றெல்லாம் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தவர்கள். பள்ளிவாசல்களின் மீதும், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், வீடுகள், வாகனங்களின் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டார்கள்.
இத்தோடு பௌத்த இனவாதத்தின் ‘கழுகுப் பார்வை’ நின்றுவிடவில்லை. முஸ்லிம்களின் ஹலால் உணவு முதல் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா, நிகாப், பர்தா போன்ற ஆடைகளையும் தடை செய்ய வேண்டுமென்று நீண்ட காலமாக கோரிக்கைகளை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
தற்போது தேசிய பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் நிகாப், புர்கா ஆடைகளுக்கு தடை விதிக்க வேண்டுமென்ற கருத்தாடல்கள் நாளாந்தம் தெரிவிக்கப்படுகின்றன.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னர் இத்தகைய ஆடைகளை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை பௌத்த இனவாதிகளிடமும் ஆட்சியாளர்களிடமும் மேலோங்கி இருக்கின்றது. அத்தோடு ஆயிரம் மத்ரஸாக்களை மூட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் எதிரொலியாக இதனை கருதிக் கொண்டாலும், முஸ்லிம்களின் ஹலால் உணவு, மத்ரஸாக் கல்வி, பெண்கள் அணியும் கலாசார ஆடைகள், பள்ளிவாசல்கள் மீதான சந்தேகக் கருத்துக்கள், இறைச்சிக்காக மாடு அறுப்பவதனை தடை செய்ய முயற்சித்தல் என்பன ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதாகவே முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-21#page-2
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM