சிவலிங்கம் சிவகுமாரன்

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அனுபவம் வாய்ந்த சட்டத்தரணியாவார். அதுமட்டுமின்றி சர்வதேசம் வரை சென்று இலங்கை அரசாங்கத்துக்காக பல பேச்சுக்களை முன்னெடுத்தவர்.

அதில் பிரதானமாக குறிப்பிடப்பட வேண்டியது 2006 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற தமிழீழ விடுதலை புலிகளுடனான சமாதான பேச்சுவார்த்தைகள். அப்போதைய இலங்கை அரசாங்கம் சார்பில் பேச்சுவார்த்தை குழுவுக்கு இவரே தலைமை வகித்தார்.

சிறந்த புலமையாளர். இவ்வாறான அனுபவம் கொண்டவருக்கு தொழிலாளர்களின் வேதன விவகாரம் தொடர்பில் கம்பனிகளுடன் பேச்சு நடத்த முடியாதா என்ற கேள்வி எழுகின்றது.

மறுபக்கம் தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ள இந்த விவகாரம் குறித்து அவர் வெளியிட்டிருக்கும் தடுமாற்றமான கருத்துக்களும் சிந்திக்க வைக்கின்றன. ஆயிரம் ரூபா நாட்சம்பளத்தை தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற சம்பள நிர்ணய சபையின் முடிவு அரசாங்கத்தால் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டது.

எனினும் உடனடியாக அது குறித்து எந்த பிரதிபலிப்புகளையும் வெளிப்படுத்தாத கம்பனிகள் சில நாட்கள் கடந்த பின்னர் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யும்படி நீதிமன்றத்தை நாடியுள்ளன.

இதற்கடுத்து தொழில் அமைச்சர் நிமல் கூறியுள்ள கருத்துக்களே குழப்பகரமானவை. ‘நாம் இந்த வழக்கில் தோற்றால் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்போம்’ என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-21#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.