நான் தேர்­தல்­களை எதிர்­பார்த்து உரை­யாற்றும் ஜனா­தி­பதி அல்ல. நாட்­டையும் மக்­க­ளையும் நேசித்து உரை­யாற்­றுவேன். வடக்கு கிழக்கில் வாழும் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் ஆழ்ந்த கரி­ச­னை­யு­டன்­செ­யற்­பட வேண்டும். என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

அர­சாங்க தொலைக்­காட்­சிக்கு ஜனா­தி­பதி வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார். 

வடக்கு கிழக்கில் வாழும் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் ஆழ்ந்த கரி­ச­னை­யு­டன்­செ­யற்­பட வேண்டும். ஒன்­பது மாகா­ணங்­களில் வாழும் மக்­களும் சம அந்­தஸ்­து­டனும் ஜன­நா­ய­கத்­து­டனும் வாழ வேண்டும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

பாத­யாத்­தி­ரை­யினால் அர­சாங்கம் பலம் அடைந்­தது. இதனால் பாத­யாத்­திரை நடத்­தி­ய­வர்கள் பல­வீனம் அடைந்­த­துடன் அர­சாங்­கத்­திற்கு சவா­லா­கவும் அமை­ய­வில்லை. அர­சாங்­கத்­திற்கு எதி­ரா­கவோ அல்­லது ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு எதி­ரா­கவோ பாத­யாத்­திரை நடை­பெ­ற­வில்லை. ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை இரண்­டாக பிளவு படுத்­து­வ­தற்­கா­கவே இது நடத்­தப்­பட்­டது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்கத் தொலைக்­காட்­சிக்கு ஜனா­தி­பதி வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

செவ்­வியின் விபரம் வரு­மாறு,

கேள்வி: இந்த அர­சாங்கம் பல­வீ­ன­மா­னது, நிலை­யற்­றது என்று கூறப்­ப­டு­கின்­றது. இந்த அர­சாங்கம் நிலை­யற்­றற அர­சாங்­கமா? அல்­லது பல­வீ­ன­மான அர­சாங்­கமா?

பதில்: இந்த அர­சாங்கம் நிலை­யா­னதா நிலை­யற்­றதா?, பல­வீ­ன­மா­னதா என்­பன பற்றி குறிப்­பி­டு­கையில், முத­லா­வது விட­ய­மாக இந்த அர­சாங்கம் எவ்­வாறு அமையப் பெற்­றது என்­பது பற்றி குறிப்­பி­டப்­பட வேண்டும். நாம் அதி­கா­ரத்­திற்கு வந்து உரு­வாக்கும் அர­சாங்கம் ஓர் இணக்­கப்­பாட்டு அர­சாங்கம் என கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லிலும், பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும், நாம் வெளி­யிட்ட தேர்தல் கொள்கைப் பிர­க­ட­னங்­களில் குறிப்­பிட்டோம். அர­சாங்­கத்தில் இணை­யு­மாறு பிர­தான அர­சியல் கட்­சி­க­ளுக்கும், பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஏனைய அர­சியல் கட்­சி­க­ளுக்கும் நாம் அழைப்பு விடுத்தோம்.

அவ்­வாறே இந்த அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் ஒரு புதிய அனு­ப­வ­மாக அனை­வ­ருக்கும் தென்­ப­டு­கின்­றது. காரணம் சுதந்­தி­ரத்தின் பின் இலங்­கையில் இவ்­வா­றான ஒரு இணக்­கப்­பாட்டு அர­சாங்கம் உரு­வா­கி­யி­ருக்­க­வில்லை. ஆயினும் இணக்­கப்­பாட்டு அர­சாங்­கத்தின் பெயர் கடந்த பல தசாப்­தங்­க­ளாக இந்­நாட்டில் பேசப்­பட்டு வந்­தது.

தேசிய பிரச்­சி­னை­க­ளின் ­போது ஒரு சில சந்­தர்ப்­பங்­களில் புலிப் . பயங்­க­ர­வா­தி­களின் பலத்­தினை எடுத்­துக்­காட்டும் சந்­தர்ப்­பங்கள் காணப்­பட்­டன. அனை­வரும் ஒன்­றி­ணைந்து அர­சாங்கம் என்ற வகையில் இதனை எதிர்­கொள்வோம் என்று நாட்டு மக்கள் கூறி­னார்கள். சுனாமி அனர்த்­தத்­தின்­போதும் இவ்­வா­றுதான் நிகழ்ந்­தது. அவ்­வா­றுதான் அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் பொது­வான விட­யங்­களில் விசே­ட­மாக புலி­களை தோற்­க­டித்­ததன் பின்னர் நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து நாட்டை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டு­மென்ற ஒரு கருத்து கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டது.

ஆகவே இவ் இணக்­கப்­பாட்டு அர­சாங்கம் தொடர்­பான மக்­க­ளது கோரிக்கை, கருத்து மற்றும் இது தொடர்­பான உரை­யாடல் நீண்­ட­கா­ல­மாக நில­வு­கி­றது. கடந்த ஆண்டு நாம் இப்­ப­ணி­யினை நிறை­வேற்­றினோம். உண்­மையில் இதன்­மூலம் திருப்­தி­ய­டை­யாதோர் ஏரா­ள­மானோர் உள்­ளனர். ஐக்­கிய தேசியக் கட்­சியின் கிரா­மப்­புற ஆத­ர­வா­ளர்கள், இது ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்கம் அல்ல எனக் கூறு­கின்­றனர். ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஆத­ர­வா­ளர்கள் இது சுதந்­தி­ரக்­கட்சி அர­சாங்கம் அல்ல என்று கூறு­கின்­றனர்.

இது­வ­ரை­ கா­லமும் சம்­பி­ர­தாயப் பூர்­வ­மாக தனி­யொரு கட்சி பாரிய ஒரு வெற்­றியின் மூலம் தனித்து ஆட்சி அமைத்­தது வந்­தி­ருந்­தது. ஆயினும் தற்­போது தேசிய ரீதி­யா­கவும் சர்­வ­தேச ரீதி­யா­கவும் அர­சாங்­கத்தின் ஒரு சில விட­யங்கள் வெற்­றி­ய­ளித்­த­போதும் ஏரா­ள­மான விடயங்­களில் நாம் தோல்­வி­ய­டைந்­துள்ளோம்.

தற்­போது உள்ள பொரு­ளா­தாரம் மற்றும் அர­சியல் நெருக்­க­டிகள் மத்­தியில் இவ்­வா­றான ஒரு அர­சாங்­கத்தின் தேவை நில­வு­கி­றது. ஆயினும் தனித்து ஆட்சி செய்­வதே எமக்கு பழக்­க­மா­ன­தாகும். தனித்து ஆட்சி செய்யும் ஓர் அர­சியல் கலா­சாரம் எமக்கு உள்­ளது. ஆகவே தனித்து ஆட்சி செய்யும் அர­சியல் கலா­சாரம்இ சம்­பி­ர­தாயம் எமக்கு பாரிய சவா­லாக உள்­ளது.

அர­சாங்கம் நிலை­யா­னதா? நிலை­யற்­றதா? பல­வீ­ன­மா­னதா என்ற உங்கள் வினா­விற்கு தற்­போது நான் கூறிய விட­யங்கள் பதி­ல­ளிக்கும் இதுதான் உண்மை நிலைமை. ஆகவே நாம் மிகப் பல­மா­ன­தொரு அர­சாங்­கத்தைக் கொண்­டுள்ளோம்.

ஜனா­தி­பதி என்ற ரீதியில் எனக்கு சுமார் அறு­பத்தி இரண்டு இலட்­சத்து ஐம்­ப­தா­யிரம் வாக்­குகள் கிடைத்­தன. அடுத்­த­தாக ஆகஸ்ட் 17 பாரா­ளு­மன்றத் தேர்­தலின் பின்னர் எம்மால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட வர­வு­செ­லவு திட்­டத்தில் தெளி­வாக தெரி­ய­வரும் விடயம் என்­ன­வென்றால், பாரா­ளு­மன்­றத்தில் எமக்கு மூன்றில் இரண்டு அதி­காரம் உள்­ளது என்­ப­தே­யாகும். பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு அதி­கா­ரத்தை வைத்­துக்­கொண்டு மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய பணிகள் ஏன் இன்னும் தாம­த­மா­கின்­றது என மனித உரி­மைகள் பேர­வையின் பரிந்­து­ரையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஆகவே எமது அர­சாங்கம் தெளி­வா­கவே ஓர் பல­மான அர­சாங்கம் ஆகும். நாம் பல­வீ­ன­மான அர­சாங்கம் அல்ல.

கேள்வி: வற் வரிக்கு என்ன நடந்­தது வற் சட்­டத்­திற்கு என்ன நடந்­தது? இதன் கார­ண­மாக அர­சாங்­கத்­திற்கு 6,000 மில்­லியன் ரூபா வரு­மான இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. இதை எவ்­வாறு திரட்­டிக்­கொள்ளப் போகின்­றீர்கள்?

பதில்: வற் வரி­யைப்­பற்றி பேசும்­போது அதன் பின்­னணி பற்றிக் கூற வேண்டும். அர­சாங்­கத்தை கொண்டு செல்ல நிதி தேவைப்­ப­டு­கின்­றது. வரி அற­விடல் பற்றி பாரி­ய­தொரு வர­லாறு உள்­ளது. சிங்­கள மன்­னர்கள் காலத்தில் வரி அற­விடல் தொடர்­பான அழ­கான கதைகள் உள்­ளன. அவ்­வாறே ஆங்­கி­லேயர் காலத்தில் வரி பற்றிக் கூறும்­போது, நாய்­க­ளுக்­கான வரி காணப்­பட்­டது. உலகில் எந்­த­வொரு நாட்­டையும் ஆட்சி செய்­வ­தற்கு எவ்­வ­கை­யான ஆட்சி முறை காணப்­பட்­ட­போதும் ஆட்சி செய்­வ­தற்கு நிதி தேவைப்­ப­டு­கி­றது. நாம் தற்­போது 9 இலட்சம் கோடி ரூபா கடன் சுமையில் உள்ளோம். நாம் எவ்­வாறு நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை வழி நடத்­து­வது? முகா­மைத்­துவம் செய்­வது? எமக்கு நிதி தேவைப்­ப­டு­கின்­றது. குறைந்த வரு­மானம் பெறு­ப­வர்­களை வாட்டி வதைத்து நிதி­யினை பெற முடி­யாது. வரி அற­வி­டு­வ­தற்கு பொருத்­த­மா­ன­வர்­க­ளிடம் வரி அற­வி­டப்­படல் வேண்டும். நாம் சமர்ப்­பித்த பிரே­ர­ணை­களில் ஒரு சில சட்ட சிக்கல் நிலை­மைகள் ஏற்­பட்­டது. நாம் அதை ஏற்­றுக்­கொள்ள வேண்டும். இது­பற்றி உயர் நீதி­மன்றம் தீர்ப்பு வழங்­கி­யது. நாம் அதை ஏற்­றுக்­கொள்­கிறோம். உயர் நீதி­மன்­றத்தின் தீர்ப்­புக்கு அமைய நாம் எமது பிரே­ர­ணையை சட்ட ரீதி­யாக சீர்­செய்து எதிர்­கா­லத்தில் சமர்ப்­பிப்போம்.

கேள்வி:வரு­மான இழப்பு அர­சாங்­கத்தை பாதிக்­காதா?

பதில்: நாம் புதி­தாக கொண்டு வரும் பிரே­ர­ணை­களில் வரு­மான இழப்­புக்­கான தீர்­வினை கண்­ட­றிய வேண்­டி­யுள்­ளது. வரு­மா­னத்தைப் பெற்­றுக்­கொள்ளும் முறை­யினை உள்­ள­டக்­கி­ய­தா­கவே எதிர்­கா­லத்தில் பிரே­ர­ணைகள் சமர்ப்­பிக்­கப்­படும். சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் பணிப்பாளர் இலங்­கையில் இருந்­த­போது அவ­ருடன் நான் கதைத்தேன். அவ்­வாறே பிர­தமர் அவர்­களும் கதைத்தார். கடைகள் பூட்­டப்­பட்டு ஊழி­யர்கள் வீதியில் இறங்கி போராட்­டங்­களை நடத்­தினர். எமது வர­லாற்றில் முதல் தட­வை­யாக வியா­பா­ரிகள் தமது கடை­களை அடைத்து வீதியில் இறங்­கினர். தமது கடை­களில் பணி­பு­ரியும் ஊழி­யர்­க­ளுடன் சேர்ந்தே அவர்கள் வீதியில் இறங்­கினர். இது தொடர்­பான பல்­வேறு கருத்­துக்கள் முன் வைக்­கப்­பட்­டன. ஆகவே இவை அனைத்­தையும் கருத்­திற்­கொண்டு முன் வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்கள் மற்றும் விமர்­ச­னங்கள் தொடர்­பா­கவும் கவனம் செலுத்தி சரி­யான முறையில் பிரச்­சி­னைகள் எழாத வண்ணம் ஒரு வேலைத்­திட்­டத்தை எதிர்­கா­லத்தில் கொண்­டு­வ­ரு­வ­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும்.

கேள்வி:இப்­பி­ரே­ரணை அமைச்­ச­ர­வைக்கு வந்­த­போது இது­பற்றி பின்னர் கலந்­து­ரை­யாடி தீர்­மானம் எடுப்போம் என நீங்கள் கூறி­னீர்கள். புதி­தாக கொண்­டு­வரும் திருத்­தம்­பற்றி உங்­க­ளது நிலைப்­பாடு என்ன?

பதில்: இதன் அடிப்­ப­டையை மாற்­று­வ­தற்கு எம்மால் முடி­யாது. வரி அவ­சி­ய­மாகும். நாட்­டுக்கு வரு­மானம் அவ­சியம். வரு­மானம் பெறு­ப­வர்­க­ளிடம் அர­சாங்கம் ஒரு பகு­தியை பெற்­றுக்­கொள்­வது உலக நிய­தி­யாகும். உல­கெங்கும் இவ்­வாறே நடை­பெ­று­கி­றது. சகல அர­சாங்­கங்­களும் அவ்­வா­றுதான். எதிர்ப்பு மற்றும் எதிர்ப்­புக்­கான கார­ணங்கள் என்ன என்­ப­து­பற்றி நாம் கருத்திற் கொள்ளல் வேண்டும். இந்த வரி முறைமை தங்­க­ளுக்கு பரீட்­சயும் அற்­றது என்­பதே சிறிய வியா­பா­ரிகள் முன் வைத்த விட­ய­மாகும். புத்­த­கங்­களை தயா­ரிப்­பது கடி­ன­மாகும். கணக்­கிடல், கணக்­காய்வு நட­வ­டிக்­கைகள் பற்­றிய அறிவு இல்­லா­தது அவர்­க­ளுக்கு பிரச்­சி­னை­யாகும். இது தொடர்­பாக அவர்­க­ளுக்கு அறி­வூட்டும் வேலைத்­திட்டம் ஒன்றை முன்­னெ­டுப்­ப­தற்கு நான் முன்­மொ­ழிந்­துள்ளேன்.

ஏதேனும் ஓர் இடத்தில் இருந்து ஏதேனும் ஒரு தொகை­யினை அர­சாங்­கத்­திற்கு பெற்­றுக்­கொள்ளத் தேவை­யாயின், வரு­மானம் பெறு­ப­வர்­க­ளிடம் அதனைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும். அவ­ரது வியா­பா­ரத்­திற்கு பாரி­ய­ளவில் பாதிப்பு இல்­லாது ஓர­ளவு தொகை அர­சாங்கம் பெற்­றுக்­கொள்ள வேண்டும். இவ்­வி­ட­யங்­க­ளுக்கு பழக்­கப்­ப­டாத பிரி­வி­னர்கள் காணப்­படின் சிறி­ய­ள­வி­லான வியா­பா­ரிகள் இவ் வரி முறை­பற்றி அவர்­க­ளுக்கு எடுத்­துக்­கூறி அவர்­க­ளுக்கு தொல்லை தராத வித­மாக அரசு என்ற ரீதியில் இது தொடர்­பான நிகழ்ச்சித் திட்­டங்­களை தயா­ரிக்க எம்மால் முடியும். மாவட்ட செய­லா­ளர்கள் அல்­லது நிதி அமைச்சின் மூலம் இது தொடர்­பாக அவர்­க­ளுக்கு அறி­வூட்ட முடியும். அர­சுக்கு வரு­மானம் தேவை என்­ப­துடன் வரு­மானம் உழைப்­ப­வர்­களை தேவை­யற்ற விதத்தில் பாதிப்­ப­டையச் செய்ய கூடாது. பொது­மக்­க­ளுக்கும் குறைந்த வரு­மானம் பெறு­ப­வர்­க­ளுக்கும் கூடு­த­லான பாதிப்பு ஏற்­ப­டாத வகையில் இது அமைதல் வேண்டும்.

கேள்வி:பாரா­ளு­மன்­றத்தில் மிகச் சிர­மத்­துடன் அங்­கீ­க­ரித்த காணாமற் போனோர் பற்­றிய அலு­வ­ல­கத்தை ஸ்தாபிப்­ப­தற்­கான சட்டம், நாட்டைப் பிரிப்­ப­தற்­கான மற்­று­மொரு வேலையா எனும் குற்­றச்­சாட்டு உள்­ளது. இதன் மூலம் இரா­ணுவ வீரர்கள் தண்­டிக்­கப்­ப­டு­வார்­களா?

பதில்:காணாமற்போனோர்கள் பற்­றிய அலு­வ­ல­கத்தை ஸ்தாபிப்­ப­தற்­கான சட்­டத்­திற்கு எதிர்ப்புத் தெரி­வித்­த­வர்­களைப் பார்க்­கும்­போது அவர்கள் இந்த நாட்டு தேசிய அர­சி­யலில் எங்கு உள்­ளார்கள் என நான் சிந்­திக்­கின்றேன். எல்லாப் பிரச்­சி­னைக்கும் ஆரம்பம், மத்தி, முடிவு உள்­ளன. காணாமற் போனோர் தொடர்­பான அலு­வ­ல­கத்தை ஸ்தாபிப்­ப­தற்­கான சட்டம் பற்றி அல்ல நாம் நோக்க வேண்டும். இதன் ஆரம்பம் எது என்­பது தொடர்­பா­கவே நாம் நோக்க வேண்டும். ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் பேர­வையின் ஊடாக எம்­மிடம் சமர்ப்­பிக்­கப்­பட்ட பிரே­ர­ணை­களே இதன் ஆரம்­ப­மாகும். பிரே­ர­ணைகள் சமர்ப்­பிக்­கப்­பட்­டன. ஏன் என நாம் அறிவோம். இப் பிரே­ர­ணை­க­ளுக்கு முகம் கொடுக்க முடி­யாமை கார­ண­மா­கவே முன்னாள் ஜனா­தி­பதி இரண்டு ஆண்­டுகள் மீத­மி­ருந்த நிலை­யிலும் தேர்­தலை நடத்­தினார்.

2015 ஆம் ஆண்டில் அர­சாங்கம் என்ற ரீதியில் எதிர்­நோக்கும் பார­தூ­ர­மான பிரச்­சி­னை­க­ளாக 9 இலட்சம் கோடி ரூபா கடன்சுமை மற்றும் ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் பேர­வையின் ஊடாக எம்­மிடம் சமர்ப்­பிக்­கப்­பட்ட பிரே­ர­ணைகள் காணப்­பட்­டன. ஆகவேதான் தேர்­த­லுக்கு சென்­றார்கள். சோதி­டக்­கா­ரர்கள் சொன்­ன­தற்­காக அல்ல. அப்­போது இருந்த அர­சாங்­கத்தின் முக்­கிய ஒரு நபர் என்ற ரீதியில் 2015இ 2016ஆம் ஆண்­ட­ளவில் பாரிய பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு முகம் கொடுக்க நேரிடும் என்­பதை நாம் அறிந்­தி­ருந்தோம். இந்த 9 இலட்சம் கோடி ரூபா கடனை அன்று நாம் அறிந்து வைத்­தி­ருந்தோம்.

2014ஆம் ஆண்டில் இது­பற்றி நிதி அமைச்சின் பிர­தா­னிகள் தனிப்­பட்ட முறையில் என்­னிடம் கூறி­னார்கள். நடை­பெற உள்ள தேர்­தலின் பின்னர் நாம் இப்­ப­த­வியில் இருக்க மாட்டோம் என கூறி­னார்கள். 2015இல் தேர்தல் நடத்­தப்­ப­டா­விடின் அடுத்த ஆண்டு நவம்பர் வரை இந்த நாட்டு ஜனா­தி­ப­தி­யாக இருந்­தி­ருக்க வேண்­டி­யவர் முன்னாள் ஜனா­தி­ப­தி­யாகும். இரண்டு ஆண்­டுகள் அதி­கா­ரத்தில் இருக்க சந்­தர்ப்பம் இருந்தும் தேர்­தலை நடாத்­தி­ய­தற்­கான காரணம் ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் ஆணை­ய­கத்தின் ஊடாக எம்­மிடம் சமர்ப்­பிக்­கப்­பட்ட பிரே­ர­ணை­க­ளுக்கு முகம் கொடுக்க முடி­யாமை மற்றும் பாரிய பொரு­ளா­தார நெருக்­கடி ஆகி­ய­ன­வாகும்.

நாம் பத­விக்கு வந்­ததன் பின்னர் புதி­ய­தொரு அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தாக சர்­வ­தே­சத்­திடம் கூறினோம். மனித உரி­மைகள், அடிப்­படை உரி­மை­களை பலப்­ப­டுத்­து­வ­தாகக் கூறினோம். நீதி­மன்­றத்தை சுதந்­தி­ர­மாக்­கு­வ­தாகக் கூறினோம் அத்­தோடு அதனை பக்­க­சார்­பற்­ற­தாக ஆக்­கு­வ­தாக கூறினோம். நாட்டின் நீதி­மன்ற முறைமை பாதிக்­கப்­பட்­டி­ருந்த விதம் அனை­வரும் அறிந்­ததே. 2015 ஜன­வரி 09ஆம் திகதி நான் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­றதன் பின்னர் அப்­போது இந்த நாட்டின் நீதித்­து­றையில் அதி உயர் பதவி வகித்த பிர­தானி என்னை சந்­தித்து கூறி­யவை பற்றி ஆச்­ச­ரி­ய­ம­டை­கின்றேன். நீதித்­து­றையின் பிர­தான நபரா இவ்­வாறு கதைக்­கின்றார் என அப்­போது நான் சிந்­தித்தேன். அங்கு கதைத்­ததைப் பற்றி நான் கூற­வில்லை. என்றோ ஒருநாள் அது­பற்றிக் கூறுவேன்.

ஜன­நா­ய­க­மற்ற சுதந்­தி­ர­மற்ற 18 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­துடன் ஒரு சர்­வா­தி­கா­ரத்தை நோக்கிப் பய­ணிக்கும் ஒரு நாடா­கவே அன்று எமது நாட்டை முழு உலகும் நோக்­கி­யது. யுத்­தத்தின் இறு­திக்­கட்­டத்தில் மனித உரி­மைகள் மீறப்­பட்­டன எனும் குற்­றச்­சாட்­டுடன் மிகப் பார­தூ­ர­மான ஒரு நிலை காணப்­பட்­டது. இந்­நி­லை­மை­க­ளி­லேயே சர்­வ­தேச யுத்த நீதி­மன்றம் மின்­சாரக் கதிரை என்­பன பற்றி மேடைகள் அதிரும் வண்ணம் கூச்­ச­லிடத் தொடங்­கி­னார்கள்.

ஆயினும் பதிய அர­சாங்கம் பத­வி­யேற்று, நாம் தேர்தல் பிர­க­ட­னத்தில் வழங்­கிய விட­யங்கள் மற்றும் சர்­வ­தே­சத்­திற்கு சமர்ப்­பித்த விட­யங்கள் தொடர்­பாகஇ சர்­வ­தேசம் எம்­மைப்­பற்றி சாத­க­மான மனோபாவத்­துடன் நோக்­கினர். 19 வது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­தினை நாம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றினோம். விசே­ட­மாக பாரா­ளு­மன்­றத்தில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி உள்­ளிட்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணிக்கு மூன்றில் இரண்டு அதி­காரம் இருந்த பாரா­ளு­மன்­றத்தில் நாம் 19வது அர­ச­ிய­ல­மைப்பு திருத்­தத்தை நிறை­வேற்­றினோம்.

19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தின் பின்னர், ஐக்­கிய நாடுகள் ஸ்தாபனம் முதல், உலகின் ஜன­நா­ய­கத்தை போற்றும் அனைத்து நாடு­களும் எம்மை நன்­நோக்­கத்­துடன் பார்க்கத் தொடங்­கினர். பிர­தா­ன­மாக நீதி­மன்­றத்தின் நடு நிலை­மைக்­காக, இந்­நாட்டின் சிறு­பான்மை புத்­தி­ஜீ­வியை நாம் அப்­ப­த­வியில் அமர்த்­தினோம். அவ்­வா­றான இடங்­களை நாம் சீர் செய்து வரு­கிறோhம். இதன் விளை­வாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முன்­னைய அர­சாங்­கத்தின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட இருந்த ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் பேவையின் பல பிரே­ர­ணைகள் இல­கு­வாக்­கப்­பட்­டன. அதா­வது இத­னை­விட பார­தூ­ர­மான பிரே­ர­ணைகள் அவர்­க­ளிடம் காணப்­பட்­டது.

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் நான் வெற்­றி­ய­டை­யாது இருந்­தி­ருப்பின் ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் பேர­வையின் பிரே­ர­ணை­களில் இருந்த விட­யங்கள் இத­னை­விட மாறு­பட்­ட­தாக இருந்­தி­ருக்கும். அப்­போது இருந்த எமது அர­சாங்­கத்­திற்கு எதி­ராக தடைகள் விதிக்­கப்­பட்­டி­ருந்­தது. எமது மீன் ஏற்­று­ம­திக்கு ஐரோப்­பிய ஒன்­றியம் தடை விதித்­தி­ருந்­தது. தைத்த ஆடைக் கைத்­தெ­தாழில் தொடர்­பான வரி நிவா­ரணம் அகற்­றப்­பட்டு இருந்­தது. அண்­மையில் ஐரோப்­பிய ஒன்­றியம் மீன் ஏற்­ற­ம­திக்­கான தடையை நீக்­கி­யது. அவர்­க­ளுக்கு தேவை­யான மீன்கள் தற்­போது எம்­மிடம் இல்லை. எமது ஆட்­சியில் முன்னர் இருந்த அர­சாங்­கத்­திற்கு எதி­ராக வர இருந்த பிரே­ர­ணைகள் வர­வில்லை என்­பதை நாம் தெளி­வாகக் கண்டோம். அது மட்­டு­மல்லஇ சென்ற ஆண்டு மார்ச் மாதம் வர­வி­ருந்த பிரே­ர­ணைகள் தொடர்­பாக புதிய அர­சாங்கம் என்ற ரிதியில் பணி­யாற்­று­வ­தற்கு அவ­காசம் தரு­மாறு நாம் கோரினோம்.

நாட்டில் ஜன­நா­யகம், சுதந்­திரம் மனித உரி­மைகள், அடிப்­படை உரி­மை­களை பலப்­ப­டுத்­து­வ­தற்­கான அடிப்­ப­டையை உரு­வாக்­கு­வ­தற்கு அவ­காசம் கோரினோம். ஐக்­கிய நாடுகள் ஸ்தாபனம் எமது கோரிக்­கை­களை நிறை­வேற்­றி­யது. கடந்த மார்ச் மாதம் கொண்டு வரு­வ­தற்கு இருந்த பிரே­ர­ணையை செப்­டெம்பர் மாதத்­திற்கு பிற்­போ­டு­மாறு நாம் கூறினோம். ஆகவே செப்­டெம்பர் மாத­ம­ளவில் கூறப்­பட்ட சர்­வ­தேச யுத்த நீதி­மன்­றமும் இல்லை. மின்­சாரக் கதி­ரையும் இல்லைஇ பொரு­ளா­தார தடையும் இல்லை.

நாம் பதவி ஏற்­காது இருந்­தி­ருப்பின் ஆசிய அபி­வி­ருத்தி வங்கிஇ உலக வங்கி, சர்­வ­தேச நாணய நிதியம், ஜைக்கா என்­பன இங்கு வந்­தி­ருக்­காது. ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் பேர­வை­யி­னூ­டாக கொண்டு வரப்­பட்ட இப்­பி­ரே­ர­ணைகள் ஏற்­க­னவே வர­வி­ருந்த பிரே­ர­ணை­க­ளை­விட மிகவும் இல­கு­வாக்­கப்­பட்டு நெகிழ்­வு­த்தன்­மை­யு­டைய பிரே­ர­ணை­க­ளாக மாற்­ற­ம­டைந்­தது.

நாம் கடந்த 11ஆம் திகதி காணா­மற்­போனோர் தொடர்­பான அலு­வ­லகம் பற்­றிய சட்டமூலத்தை சமர்ப்­பித்தோம். அதனை நான் சமர்ப்­பித்தேன். பிர­த­மரும் எமது இரண்டு பிர­தான கட்­சி­களும் கலந்­து­ரை­யாடி அதில் பல திருத்­தங்­களை மேற்­கொண்டோம். அவ்­வாறு செய்­துதான் நாம் இதை அங்­கீ­க­ரித்தோம்.

அப்­போது வந்த விமர்­ச­னங்­களை நான் கண்டேன். நேற்று பாரா­ளு­மன்­றத்தின் எதிரே ஒரு சிலர் நிலத்தில் உட்­கார்ந்து கூச்­ச­லி­டு­வதை நான் கண்டேன். ஆக­வேதான் இப்­பி­ரச்­சி­னையின் ஆரம்பம், மத்தி, முடிவு என்­ப­வற்றை புரிந்­து­கொள்ள வேண்­டு­மென நான் கூறினேன். கூச்­ச­லிடும் இவர்­க­ளுக்கு ஆரம்­பமும் இல்லை மத்­தியும் இல்லை முடிவும் இல்லை. இந்­ந­ட­வ­டிக்­கைகள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு கூச்­ச­லிடும் நபர்­க­ளுக்கு நான் அழைப்­பு­வி­டுக்­கின்றேன்.

விசே­ட­மாக இந்த நாட்டின் சிங்­கள பௌத்த மக்­களை தூண்­டி­விட வேண்டாம்இ தவ­றாக வழி­ந­டத்த வேண்டாம். பௌத்த தேரர்­க­ளுக்கு இந்த சட்டம் தொடர்­பாக பிழை­யாக விளக்கம் அளிக்க வேண்டாம். நாம் அனை­வரும் இந்த நாட்டை நேசிக்­கின்றோம் என நான் மிகத் தெளி­வாகக் கூறு­கின்றேன்.

நான் தேர்­தல்­களை எதிர்­பார்த்து உரை­யாற்றும் ஜனா­தி­பதி அல்ல. நாட்­டையும் மக்­க­ளையும் நேசித்து உரை­யாற்­றுவேன். வெறு­மனே கூச்சல் போடு­வதால் அர்த்தம் இல்லை நாட்­டையும் மக்­க­ளையும் பற்றி சிந்­தித்து நட­வ­டிக்­களை மேற்­கொள்ள வேண்டும். சிங்­கள பெளத்­த­வர்கள் வாழும் ஏழு மாகா­ணங்­க­லும் அம் மக்கள் நிம்­ம­தி­யா­கவும் சந்­தோ­ஷ­மா­கவும் வாழ வேண்டும். எனவே வடக்கு கிழக்கில் வாழும் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் ஆழ்ந்த கரி­ச­னை­யு­டன் ­செ­யற்­பட வேண்டும். ஒன்­பது மாகா­ணங்­களில் வாழும் மக்­கழும் சம அந்­தஸ்­து­டனும் ஜன­நா­ய­கத்­து­டனும் வாழ வேண்டும்.

கேள்வி:அனுமன் பாலம் அமைக்­கப்­படும் என்று கூறப்­ப­டு­கின்­றதே?

பதில்: தென்­னிந்­தி­யாவில் தேர்­தலை இலக்கு வைத்து இந்­தி­யா­விற்கும் இலங்­கைக்கும் பாலம் அமைக்­கப்­படும் என தெரி­விக்­கப்­பட்­டது. அதே­போன்று இந்­திய லொக் சபை­யிலும் தென்­னிந்­தி­யர்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­யொன்றும் இதனை அறி­வித்­தது. சிலர் இன்று இது தொடர்­பாக சர்­வ­தேச நாணய நிதி­யத்­தி­ட­மி­ருந்து பணம் பெற்றுக் கொண்­ட­தா­கவும் தெரி­விக்­கின்­றனர். ஆனால் இன்று ஒன்றை கூறி­யா­க­வேண்டும். இதே­வேளை இவ்­வா­றான பாலம் அமைக்­கப்­ப­டாது என்று தெட்டத் தெளி­வாக கூறு­கின்றேன். இது பொய்­யான பிர­சாரம். இது மக்­களை பிழை­யாக திசைத்­தி­ருப்பும் நட­வ­டிக்­கை­யாகும்.

கேள்வி பிக்­குமார் கைது செய்­யப்­ப­டு­வ­தாக குற்றம் சாட்­டப்­ப­டு­கின்­றதே?

பதில் : பெளத்த குரு­வான ஒருவர் தர்ம உப­தேசம் செய்­யும்­போது அல்­லது தானத்­திற்கு செல்­லும்­போது எவரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை. பல்­வே­று­பட்ட குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பி­லேயே இவர்கள் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இதன்­போது விசா­ர­ணைகள் நடை­பெறும். அத்­துடன் பௌத்த குரு கிறிஸ்­தவ பாதி­ரியார் என்ற வேறு­பாடு கிடை­யாது. நாட்டின் சட்­டத்தின் முன்­பாக அனை­வரும் சமம்.