கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த கவலைகள் காரணமாக இந்த கோடையில் பிற்போடப்பட்ட 2020 டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கு எந்த சர்வதேச ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறுப்பட்டுள்ளது.

ஜப்பானிய அதிகாரிகள் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் குழுக்களிடம், சர்வதேச ரசிகர்கள் நாட்டிற்கு நுழைவதற்கு உத்தரவாதம் அளிக்கப்படுவது மிகவும் சாத்தியமில்லை என்று கூறினார்.

டோக்கியோ ஒலிம்பிக் பேட்டிகள் ஜூலை 23 ஆம் திகதியும் பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளன.

ஜப்பான் மற்றும் பல நாடுகளில் "சவாலான" கொவிட் -19 நிலைமை, உலகளாவிய பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் வைரஸின் மாறுபட்ட விகாரங்கள் தோன்றுவது ஆகியவை இந்த முடிவுக்கு வழிவகுத்துள்ளன.

 இந் நிலையில் ஒலிம்போட்டிகளுக்கான நுழைவு சீட்டு வைத்திருப்பவர்களுக்கு பணம் திருப்பித் தரப்படும் என்றும் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.