(ஆர்.ராம்)

“தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்வை மையப்படுத்திய இலங்கைரூபவ் இந்திய ஒப்பந்தத்தின் வழி ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தினை நிலைநிறுத்துவதற்கு 33 ஆண்டுகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர் இலங்கையுடனான ‘இலவுகாத்தகிளி’ இராஜதந்திர செயற்பாட்டிலிருந்து வெளியே வந்த இந்தியா, முதற்தடவையாக சர்வதேச தளத்தினை பயன்படுத்தியிருக்கின்றது”

“13 ஐ சர்வதேச தளத்திற்கு கொண்டு சென்று தீர்மானமாக்கிய இந்தியா 13 குறித்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ‘கிடுக்குப்பிடியையும்’ தளத்தியது. தற்போது தமிழ் பேசும் தரப்புக்களின் 13 தொடர்பான நிலைப்பாட்டை மாற்றியமைப்பதே இந்தியாவுக்குள்ள பெருஞ்சவால்”

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைகின்றது. இந்தக் கூட்டத்தொடரில் “இலங்கையில் நல்லிணக்கம்ரூபவ் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றை முன்னேற்றுதல்” எனும் தலைப்பிலான பிரேரணை பிரித்தானியா தலைமையிலான ஆறு நாடுகளின் கூட்டு முயற்சியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

15 அவதானிப்புக்கள், 16 செயற்பாட்டு முன்மொழிவுகள் உள்ளடங்கலான இந்த பிரேரணை மீது நாளை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இந்த வாக்கெடுப்பின்போது பிரேரணை நிச்சயமாக வெற்றியடைவது திடமானது.

இவ்வாறு நிறைவேறப்போகும் பிரேரணை பற்றிரூபவ் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்ரூபவ் சிவில், மத, தரப்புக்களிடையே மாறுபட்ட கருத்துக்களும் வாதப்பிரதிவாதங்களும் நீடித்துக்கொண்டிருக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அதனுடன் இணைந்து பயணிக்கும் சிவில், மத தரப்புக்களும் பிரேரணையை வரவேற்றுள்ளதோடுரூபவ் தாம் முன்மொழிந்தரூபவ் எதிர்பார்த்த விடயங்கள் அதில் உள்ளீர்க்கப்பட்டதாக கூறுகின்றன. 

அத்துடன் தற்போதைய பூகோளரூபவ் பிராந்திய அரசியல் சூழலில் இவ்வாறானதொரு பிரேரணையை விடவும் மேம்பட்ட பிரேரணையொன்றை எதிர்பார்ப்பது முட்டாள் தனமானது என்ற யார்த்தமான புரிதலையும் வெளிப்படுத்துகின்றன.

அதேநேரம், தமிழ்த் தேசியத் தளத்தில் கூட்டமைப்புக்கு எதிராக இருக்கின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, மற்றும் அவற்றுடன் இணைந்து செயற்படும் சிவில், மத, பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்புக்கள் பிரேரணையையும் பிரேரணையை ஆதரித்த கூட்டமைப்பையும் மிகக் கடுமையாக விமர்சிக்கின்றன.

பிரேரணையானது இலங்கையினை பொறுப்புக்கூறச் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக அதற்கு மேலும் கால அவகாசம் வழங்குவதாக கூறும் அத்தரப்புக்கள் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதே ஒரே வழி என்றும் வலியுறுத்துகின்றன. அதற்காக வடக்கிலும், கிழக்கிலும் மாறுபட்ட வடிவங்களில் போராட்டங்களையும் அவை முன்னெடுத்து வருகின்றன.

எவ்வாறாயினும்ரூபவ் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையே நிறைவேற்றப்படப் போகின்றது. அதன்பின்னர் பொறுப்புக்கூறல் விடயத்தில் முரண்டு பிடிக்கும் ஆட்சியில் உள்ள இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டு அடுத்து வரும் கூட்டத்தொடர்களில் ஐ.நா.உயர்ஸ்தானிகரின் மீளாய்வு அறிக்கைகள், உறுப்பு நாடுகளின் அவதானிப்புக் கூற்றுக்கள் என்பன நிகழவுள்ளன. இது ஐ.நா.அரங்கில் தொடரத்தான் போகின்றது.

வெற்றி பெற்ற இந்தியா இவ்வாறான நிலையில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரினை ஒட்டுமொத்தமாக பார்க்கின்றபோது அதில் வெற்றி பெற்றிருப்பது இந்தியா தான். இலங்கை விடயம் 2012இல் மனித உரிமைகள் பேரவையை அடைந்ததிலிருந்து இந்தியாவின் வகிபாகம் பற்றியே அனைத்து தரப்புக்களாலும் அதிக கரிசணைகள் கொள்ளப்பட்டு வந்தன.

அவ்வாறான நிலைமைக்கு பல காரணங்கள் உள்ளன. இலங்கையின் அயல் நாடு என்பது ஒன்றுரூபவ் மற்றொன்று இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் தலைமையை இந்தியா கொண்டிருப்பதாகும்ரூபவ் அத்தோடு இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவுக்கு தார்மீக கடமையும் உள்ளது. இவ்வாறு அந்தப் பட்டியலை நீட்டிச் செல்ல முடியும்.

அந்த அடிப்படையில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணைகள் மீதான வாக்கெடுப்பின் போது 2014ஆம் ஆண்டிலிருந்து இந்தியா நடுநிலைமையே வகித்து வருகின்றது. இந்த முறையும் அதே நிலைமையே தொடரவுள்ளது.

ஆனால், இந்தியா இம்முறை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை ‘இலங்கையில் தனது பிடியை நீடித்தும்ரூபவ் ஆழமாகவும் வைத்திருப்பதற்கான நிரந்தரமான அத்திவாரத்தினை இடுவதற்கு பயன்படுத்தி இருக்கின்றமை தான்’ அதன் இராஜதந்திர மூலோபாய வெற்றியாகின்றது.

இலங்கை ஒரு பல்லின, பல்மத, பல்மொழி நாடாக ஏற்றுக்கொண்டும் வடகிழக்கை தமிழ் முஸ்லிம் மக்களின் இணைந்த தாயகப்பிரதேசமாக ஏற்றுக்கொண்டும் தமிழ் மொழியை அரச மொழியாக ஏற்றுக்கொண்டும் மாகாண சபைகளுடான அதிகாரப் பரவலாக்கத்தை முன்வைப்பதே இலங்கை, இந்திய ஒப்பந்தமாகும்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-21#page-7

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.