சி.அ. யோதிலிங்கம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டுத்தொடர் முடிவு நிலையை அண்மித்துள்ளது. இலங்கை தொடர்பான பிரேரணை நாளை திங்கட்கிழமை வாக்கெடுப்பு விடப்படவுள்ளது. 

இதில் அமெரிக்க – மேற்குலக - இந்தியக் கூட்டுக்கு வெற்றி கிடைக்கலாம். இக்கூட்டத்தொடரை முன்வைத்து பலதரப்பட்டவர்களும் பல்வேறு பேரம்பேசலில் ஈடுபட்டாலும் மௌனமாகவும் ரூபவ் நிதானமாகவும் காய்களை நகர்த்தி பேரம்பேசலில் ஈடுபட்டது இந்தியா தான். அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் இந்த விவகாரத்தை முன்னெடுத்தாலும் விவகாரத்தின் போக்கை தீர்மானிப்பது இந்தியா தான்.

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் விருப்பங்களைச் சுற்றியே ஏனைய நாடுகள் பயணிக்கின்றன. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் - இந்தியாவை முன்வைத்துத்தான் இந்தோ – பசுபிக் மூலோபாயத் திட்டத்தை நகர்த்த முனைகிறது.

இந்தியா மிகப்பெரிய சந்தையாக இருப்பதனாலும்ரூபவ் பிராந்திய வல்லரசு என்ற நிலையில் இந்தியா இருப்பதனாலும் இந்தியாவின் விருப்பங்களுக்கு முன்னுரிமை கொடுத்தே செயற்பட அமெரிக்கா தலைமையிலான மேற்குலம் முனைகின்றது. இந்திய தேசியப் பாதுகாப்பிலும் அது கரிசணை கொள்கின்றது.

இந்த யதார்த்த நிலை இலங்கை அரசிற்கு நன்றாகவே தெரியும். இதனால் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் என்ன தான் காட்டுக்கூச்சல்களை எழுப்பினாலும் விவகாரத்தின் பிரதான ‘அழுத்தி’ இந்தியாவின் கையில் இருப்பதால் இந்தியாவை சமாளிப்பதற்கே கடும் முயற்சி எடுக்கின்றது. இந்தியாவை சமாளித்தால் எல்லாம் தானாக நடைபெறும் என்பது இலங்கை ஆட்சியாளர்களுக்கு நன்றாகத் தெரியும்.

பிரித்தானியா தலைமையிலான ஆறு நாடுகளின் பிரேரணை நீர்த்துப்போகக்கூடிய வகையில் வெளிவந்தமைக்கு இந்தியாவும் ஒரு காரணமாக இருக்கலாம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு விவகாரம் செல்வதை இந்தியாவும் விரும்பவில்லை. காரணம் போரை இந்தியாவும் சேர்ந்து தான் நடாத்தியது.

போரின் இறுதிக் காலங்களில் போரை எவ்வாறு நடாத்துவது என்பது தொடர்பான ஆலோசனைக் குழுவில் இந்தியப் பிரதிநிதிகளும் அடங்கியிருந்தனர். போரை நிறுத்துவது தொடர்பான மேற்குலகத்தின் முயற்சிகள் தோல்வியடைந்தமைக்கும் இந்தியா தான் காரணம் எனக் கூறப்படுகின்றது.

எனவே போர்க் குற்ற விசாரணைகள் நுணுக்கமாக மேற்கொள்ளப்படுமாக இருந்தால் இந்தியாவும் இதற்குள் சிக்க வேண்டிய நிலை உருவாகும். இதனை தவிர்க்கவே இந்தியா அதிகம் விரும்பலாம். ஜெனிவா விவகாரத்தில் இந்தியா விரும்புவதொல்லாம் இலங்கைத் தீவில் தன்னுடைய நலன்களைப் பேணக்கூடியளவிற்கு மென் அழுத்தங்களைக் கொடுப்பது மட்டுமே.

இலங்கை அரசு இந்தியா தொடர்பாக நடந்துகொள்ளும் அளவிற்கேற்ப இந்த மென் அழுத்தங்களின் பிரமாணம் கூடிக் குறையலாம். இந்தியா வன் அழுத்தங்களுக்கு இப்போதைக்குச் செல்லப் போவதில்லை. இலங்கைத் தீவு முழுமையாக சீனா பக்கம் சார்ந்து இந்தியாவுக்கு சிறிய வெளிகூட இல்லை என்ற நிலை வரும்போதுதான் வன்அழுத்தம் பற்றி இந்தியா சிந்திக்கும். தற்போது இந்தியாவின் கவனமெல்லாம் இலங்கைத்தீவில் சீனாவின் செல்வாக்கை சமநிலைப்படுத்துவதே ஆகும்.

ஜெனிவா விவகாரம் தொடர்பாக இந்தியா இரண்டுவிதமான அணுகுமுறைமைகளைப் பின்பற்றுகின்றது. ஒன்று ஜெனிவாவில் இலங்கை இந்திய நலன்களுக்கு விட்டுக்கொடுக்கும் அளவிற்கு ஏற்ப மென் அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றது.

அதேவேளை இலங்கையில் தமிழ்த்தரப்பு விவகாரத்ததை உயர்த்துவதன் மூலம் இன்னோர் வகையான மென் அழுத்தத்தைக் கொடுக்க முனைகின்றது. அதேவேளை தமிழ்த்தரப்புக்கும் தமிழர் விடயங்களில் அக்கறையுடன் இருப்பதாகக் காட்டிக்கொள்ள முனைகின்றது.

ஜெனிவாவில் இந்தியப் பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தமிழ் மக்களின் விவாகாரங்களையும் எழுப்பியிருந்தார். இலங்கையில் தமிழ் மக்கள் சம அந்தஸ்துடன் வாழ்வதற்கான சூழலை உருவாக்குவது அவசியம் எனக் கூறியிருந்தார். இலங்கைக்கான இந்தியத் உயர்ஸ்தானிகரின் வடக்கு, கிழக்கு விஜயமும் இதனையே வெளிக்காட்டியிருந்தது.

எதிர்பாப்புக்களுக்கு மாறாக அவர் கஜேந்திரகுமார் சந்தித்ததோடு கிழக்கில் கருணா, பிள்ளையானை; குழுவினரையும் சந்தித்திருந்தார். இங்கு கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரை சந்தித்தது தான் முக்கியமானது ஏனெனில் கஜேந்திரகுமார் இந்தியாவை கடுமையாக விமர்சித்து வருபவர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரையும் ரூபவ் விக்கினேஸ்வரனையும் இந்தியாவின் எடுபிடிகள் என்று பகிரங்கமாகவே விமர்சிப்பவர். ஆவ்வாறானவரை இந்தியா சந்தித்திருக்கின்றது. அதற்கு காரணம்ரூபவ் இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்திற்கு வெளியே தமிழ்த் தேசியக் கட்சிகள் எதுவும் இருக்கக் கூடாது என்பதற்காகவே ஆகும்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-21#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.