ஜெனிவா தீர்மானம் ! எந்த நாடு, எந்தப் பக்கம் ?

21 Mar, 2021 | 11:00 AM
image

-என்.கண்ணன்

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நடக்கவுள்ள வாக்கெடுப்பில், தீர்மானம் தோற்கடிக்கப்படும் வாய்ப்பு இல்லை. இலங்கை அரசே அதனை நம்பவில்லை.ஆனால் எத்தனை நாடுகள் இதற்கு ஆதரவாக வாக்களிக்கப் போகின்றன என்ற கேள்வி உள்ளது”

“ஜெனிவாவில் 2012 இல் 24 நாடுகளும், 2013 இல் 25 நாடுகளும், 2014இல் 23 நாடுகளும் இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தன. இந்தமுறை அந்தளவு வாக்குகள் கிடைக்குமா என்பது கேள்வியாகவுள்ளது”

“ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கை மீதான விவாதத்தில் இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள் கருத்து வெளியிட்டிருந்த போதும், அவற்றில் 10 நாடுகள் தான் வாக்களிக்கக் கூடியவை. அந்த 10 நாடுகளில் எத்தனை இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்ற குழப்பம் இருக்கிறது”

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்னும் இரண்டு நாட்களில் நிறைவடையவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் முக்கியமான கட்டம் இது தான், பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மான வரைவுகள் மீது நாளையும் மறுநாளும் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இலங்கைக்கு எதிராக, பிரித்தானியா தலைமையிலான நாடுகளால் கொண்டு வரப்பட்டுள்ள, தீர்மானம் மீது பெரும்பாலும் நாளை மாலை வாக்கெடுப்பு இடம்பெறலாம். அல்லது மறுநாள் காலை வாக்கெடுப்பு நடக்கலாம்.

இந்த தீர்மானத்தின் மீது எத்தனை நாடுகள் ஆதரவாக வாக்களிக்கப் போகின்றன - எத்தனை நாடுகள் எதிர்த்து வாக்களிக்கப் போகின்றன என்பது முக்கியமான கேள்வியாக இருக்கிறது.

47 நாடுகள் வாக்களிக்கும் தகைமை பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், கொண்டு வரப்படும் எந்தவொரு தீர்மானத்தையும், தோற்கடிப்பதற்கு 24 நாடுகளின் ஆதரவை பெற்றிருக்க வேண்டும்.

ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானம் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா போன்ற நாடுகளின் ஆதரவுடன் தோற்கடிக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் உறுதியாக கூறிவந்தது. 

ஆனால் இப்போது அரசாங்கத்தின் அந்த உறுதிப்பாடு தளர்ந்து போய் விட்டது. 10 தொடக்கம் 15 வரையான நாடுகளின் ஆதரவையே உறுதிப்படுத்தக் கூடிய நிலையில் இலங்கை அரசு காணப்படுகிறது.

இலங்கையைப் பொறுத்தவரை 15 நாடுகளின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொண்டாலே பெரிய விடயம் தான். ஏனென்றால், மேற்குலக நாடுகளின் அழுத்தங்களும், இலங்கை அரசாங்கம் தனக்குத்தானே தோண்டிக் கொண்ட புதைகுழியும் இந்த விவகாரத்தில் தாக்கம் செலுத்தியிருக்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஆபிரிக்க நாடுகளுக்கும், ஆசிய பசுபிக் நாடுகளுக்கும் தலா 13 ஆசனங்கள் உள்ளன. இலத்தீன் அமெரிக்கா ,மற்றும் கரீபியன் நாடுகளுக்கு 8 ஆசனங்களும், மேற்கு ஐரோப்பிய மற்றும் ஏனைய நாடுகளுக்கு 7 ஆசனங்களும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 6 ஆசனங்களும் இருக்கின்றன.

ஜெனிவா பேரவையில் மேற்குலக ஆதிக்கம் இருப்பதாக அரசாங்கம் கூறினாலும், 47 உறுப்பு நாடுகளில் மேற்கு ஐரோப்பிய மற்றும் ஏனைய நாடுகளின் எண்ணிக்கை 6 மட்டும் தான்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், ரஷ்யா மற்றும் அதன் செல்வாக்கிற்கு உட்பட்ட நாடுகளும் இருக்கின்றன. எனினும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் அணிக்குள் மொன்ரெனிக்ரோ, செக் குடியரசு, எஸ்தோனியா போன்ற, இலங்கை தொடர்பான தீர்மானங்களுக்கு அனுசரணை வழங்கிய நாடுகளும் கூட இருக்கின்றன.

எந்த வகையில் பார்த்தாலும், மேற்குலக நாடுகளின் செல்வாக்கிற்கு உட்பட்டவையாக இருக்கக் கூடியவை 10 -12 மட்டும் தான். ஏனைய 35 நாடுகள் ஆபிரிக்க மற்றும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்தவை.

இந்த நாடுகளின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொண்டாலே, இலங்கையினால் வெற்றிபெற முடியும். ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கை மீதான விவாதத்தில் இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள் கருத்து வெளியிட்டிருந்த போதும், அவற்றில் 10 நாடுகள் தான் வாக்களிக்கக் கூடியவை.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-21#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22