இந்தியாவில்  ஒரு நாளில் புதிதாக 40,953 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 

நேற்று ஒரே நாளில் 188 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 59 ஆயிரத்து 370 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 110 நாட்களில் இதுவே அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். இருப்பினும் பாதிப்பில் உலகளவில் 3-வது இடத்திலேயே இந்தியா நீடிக்கிறது.

இந்தியாவில் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 10 இலட்சத்து 83 ஆயிரத்து 679 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா மீட்பில் உலக அளவில் இந்தியா தொடர்ந்து முதல் இடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.