கடலில் மீன் பிடிக்க செல்வோருக்கு பல்வேறு சுவாரஷ்யமான சம்பவங்கள் இடம்பெறுவது வழமை.

இவற்றுள் பல வெளிச்சத்துக்கு வராமால் போவது உண்டு . மேலும் காணொளியில் பதிவாகும் சில சுவாரஸ்ய சம்பவங்கள் அவர்களை மாத்திரம் அன்றி உலகையே மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்துவதுண்டு.

அந்தவகையில், அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் மார்கோ தீவில்  மீன் பிடியில் ஈடுப்பட்டிருந்த  Ben Olsen என்பவருக்கு வாழ்க்கையில் நம்ப முடியாத சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அதாவது, சுமார் ஐந்து அடி நீளமும் 90 கிலோ எடை கொண்ட  ஆழ் கடலில் வசிக்கும் stone fish  என்ற மீன், படகிற்கு  குறுக்காக அவரின் முகத்தை அறைவது போன்று பாய்ந்துள்ளது. எனினும் அவர் நொடி பொழுதில் தப்பிவிட்டார்.

தனது மீன் பிடி கருவி நெருங்கி வருவதை அறிந்திருந்தே அந்த மீன் பாய்ந்திருக்க வேண்டும் என Ben Olsen தெரிவித்துள்ளார். 

இந்த சுவராஸ்யமான சம்பவம் மீன் பிடி படகில் பொறுத்தப்பட்டிருந்த வீடியோ கமராவில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் மீனவரான Ben Olsen தெரிவிக்கையில்,

'நான் அதிர்ஷ்டசாலி, அது என்னைத் தாக்கவில்லை.  அவற்றின் தலை பகுதி திடமான எலும்புளால் ஆனது . எனவே அது என்னைத் தாக்கியிருந்தால் நான் காயமடைந்திருப்பேன். நிச்சயமாக இது எனக்கு ஒரு மோசமான நாளாக இருந்திருக்கும்.

'நான்  கடந்த 15 வருடங்களாக மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றேன். இதற்கு முன்னர் எனக்கு இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டதில்லை என்றார்.