பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளா்.

நளின் பண்டாரவுக்கு எதிராக அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயே இவ்வாறு முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவினால் தெரிவிக்கப்பட்ட கருத்துத் தொடர்பிலேயே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.