செ.தேன்மொழி

நாட்டின் மூன்று வேறுப்பட்ட பகுதிகளில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை உரிய பிரதேசத்துக்கு பொறுப்பான  பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தலங்கம

தலங்கம பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு ஹோகந்தர பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரிடமிருந்து 3 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மீகொட

மீகொட பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 3 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீகொடதெணிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெஹெரகம

வெஹெரகம பகுதியில் மத்திய முகாம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சியம்பலாவெவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரிடமிருந்து 313 கிராம் 950 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றபட்டுள்ளது.