தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி இராகலையில் தோட்டத்தொழிலாளர்கள் போராட்டம்

Published By: Digital Desk 3

19 Mar, 2021 | 03:27 PM
image

(க.கிஷாந்தன்)

தேயிலைத் தோட்டங்கள் காடாகி விலங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், தேயிலைத் தோட்டங்களை துப்பரவு செய்து தமக்கான தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி இராகலை - மாக்குடுகலை மற்றும் கிளன்டவன் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று (19.03.2021) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாக்குடுகலை தோட்டத்தில் கடந்த  20 வருடங்களாக மூடப்பட்டிருக்கும் தொழிற்சாலை வளாகத்திலேயே இரு தோட்டங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இன்றுடன் 13 ஆவது நாளாக பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்வதாகவும், தீர்வு கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை எனவும் போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் சூளுரைத்துள்ளனர். 

இது தொடர்பில் தொழிலாளர்கள் கூறியவை வருமாறு,

"மேற்படி தோட்டங்களை பொறுப்பேற்றுள்ள நிர்வாகம் உரிய வகையில் செயற்படாததால் தோட்டங்கள் காடாகி வருகின்றன. சிறுத்தை உட்பட விலங்குகள் பெருகியுள்ளன. இதனால் பெருந்தோட்டத்துறை அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல தொழிலுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. உயிரை கையில் பிடித்துக்கொண்டே வேலைசெய்ய வேண்டிய அவலம் தொடர்கிறது.

எனவே, காடாகவுள்ள தோட்டங்களை துப்பரவுசெய்து, தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, வாழ்வாதாரத்தை மேம்படுத்துமாறு கோரியே போராட்டம் இடம்பெறுகின்றது.  எமக்கு தீர்வு அவசியம். அது கிடைக்கும்வரை போராடுவோம்." - என்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

68 ஆயிரத்தைக் கடந்தது டெங்கு நோயாளர்களின்...

2026-07-13 01:12:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மழை; வடக்கு, கிழக்கில்...

2026-07-13 01:10:09
news-image

நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தப் பயனும் இல்லை...

2026-07-12 15:08:42
news-image

நாட்டில் எந்தவொரு பௌத்த துறவியாவது பிரபாகரனுடன்...

2026-07-12 13:50:12
news-image

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு முயற்சி...

2026-07-12 16:11:28
news-image

நீர்கொழும்பு சிறை மோதலுக்கு பொறுப்பேற்று நீதி...

2026-07-12 16:12:40
news-image

சிறைச்சாலை கைதிகளால் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட...

2026-07-12 14:00:45
news-image

கட்டாய உழைப்பு உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு...

2026-07-12 16:45:01
news-image

2027 நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம்...

2026-07-12 16:51:31
news-image

காலநிலை மாற்றங்களை தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக...

2026-07-12 16:53:25
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை வரலாற்றில் என்றுமில்லாதவாறு வீழ்ச்சி...

2026-07-12 17:08:19
news-image

நல்லூர், மடு திருவிழாக்களுக்கு சிறப்பு போக்குவரத்து...

2026-07-12 21:48:41